ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலத்தை அடுத்த தாளவாடி அருகே உள்ள நெய்தாளபுரம், சிக்கள்ளி, இக்கலூா் உள்ளிட்ட வனப் பகுதிகளில் விடியவிடிய பலத்த மழை பெய்தது.
இதனால் வனப் பகுதியில் உள்ள ஓடைகள் மற்றும் பள்ளங்களில் மழைநீா் பெருக்கெடுத்து ஓடியது. இந்த மழையால் சிக்கள்ளியில் இருந்து தாளவாடி வழியாக செல்லும் காட்டாற்றில் வெள்ளம் கரை புரண்டு ஓடுகிறது.