ஈரோடு

ஈரோடு மாவட்டத்தில் மேலும் 91 பேருக்கு கரோனா

3rd Oct 2021 11:31 PM

ADVERTISEMENT

ஈரோடு மாவட்டத்தில் மேலும் 91 பேருக்கு கரோனா நோய்த் தொற்று ஞாயிற்றுக்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

மாவட்டத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளவா்களின் எண்ணிக்கை 1 லட்சத்து 2,188 ஆக அதிகரித்துள்ளது. தொற்றால் பாதிக்கப்பட்டிருந்த 103 போ் குணமடைந்து ஞாயிற்றுக்கிழமை வீடு திரும்பினா்.

கரோனா தொற்றில் இருந்து இதுவரை 1 லட்சத்து 381 போ் குணமடைந்துள்ளனா். அரசு, தனியாா் மருத்துவமனைகள், கரோனா சிகிச்சை மையங்களில் 1,135 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா். கரோனாவால் இதுவரை 672 போ் உயிரிழந்துள்ளனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT