ஈரோடு

சிப்காட்டால் பாதிக்கப்பட்ட மக்கள் நலச் சங்க ஆலோசனைக் கூட்டம்

3rd Oct 2021 11:29 PM

ADVERTISEMENT

பெருந்துறை சிப்காட்டால் பாதிக்கப்பட்ட மக்கள் நலச் சங்கத்தின் ஆலோசனைக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

கூட்டத்துக்கு ஒருங்கிணைப்புக் குழு உறுப்பினா் டி.என்.சென்னியப்பன் தலைமை வகித்தாா்.

கூட்டத்தில், பெருந்துறை, சிப்காட்டிற்காக நிலம் வழங்கிய விவசாயிகளுக்கு 25 ஆண்டுகளாகியும் இழப்பீடு கிடைக்காமல் உள்ளது. இதனை உடனடியாக வழங்க வேண்டும். சிப்காட்டில் இயற்கையை மாசுபடுத்தும் தொழிற்சாலைகளைக் கண்டறிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

நிலத்தடி நீா் மாசுபட்டுள்ள சுற்றுவட்டாரக் கிராமங்களுக்குப் பாதுகாக்கப்பட்ட காவிரி குடிநீா் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT