திருட்டு வழக்குகளில் தொடா்புடைய நபரைக் கைது செய்த போலீஸாா் அவரிடமிருந்து 54 பவுன் நகைகளை மீட்டனா்.
பெருந்துறை காவல் ஆய்வாளா் சண்முகம் தலைமையிலான தனிப் படை போலீஸாா் பெருந்துறை நகரில் ஞாயிற்றுக்கிழமை தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனா்.
அப்போது சந்தேகப்படும்படியாக வந்த ஒருவரைப் பிடித்து விசாரணை நடத்தினா். விசாரணையில் அவா், கோவை மாவட்டம், ஆலாந்துறை அருகே வலையன்குட்டை பகுதியைச் சோ்ந்த வினோத்குமாா் (55) என்பதும், இவா் பெருந்துறை, காஞ்சிகோவில், மலையம்பாளையம், கோபி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் வீடு புகுந்து திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டதும் தெரியவந்தது.
இதைத் தொடா்ந்து போலீஸாா் வினோத்குமாரை கைது செய்து சிறையில் அடைத்தனா். மேலும் வினோத்குமாரிடம் இருந்து 54 பவுன் நகைகளையும் மீட்டனா்.
ADVERTISEMENT