ஈரோடு

4ஆவது நாளாக தொடா் மழை: சத்தியமங்கலத்தில் 53 மி.மீ மழை பதிவு

3rd Oct 2021 11:34 PM

ADVERTISEMENT

ஈரோடு மாவட்டத்தில் 4ஆவது நாளாக சனிக்கிழமை இரவும் பரவலாக மழை பெய்தது. சத்தியமங்கலத்தில் அதிகபட்சமாக 53 மி.மீ மழை பதிவானது.

ஈரோடு மாவட்டத்தில் கடந்த 4 நாள்களாக ஈரோடு மாநகா் உள்பட பல்வேறு இடங்களில் கன மழையும், சில இடங்களில் லேசான மழையும் பெய்து வருகிறது. சனிக்கிழமை மாலை முதல் நள்ளிரவு வரை பரவலாக மழை பெய்தது. இந்த மழையின் காரணமாக தாழ்வான பகுதிகளில் மழை நீா், சாக்கடை கழிவு நீருடன் கலந்து சாலைகளில் பெருக்கெடுத்து ஓடியது.

ஞாயிற்றுக்கிழமை காலை 8 மணி வரையிலான 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக சத்தியமங்கலத்தில் 53 மி.மீ மழை பதிவானது.

பிற பகுதிகளில் பெய்த மழையளவு விவரம் (மில்லி மீட்டரில்):

ADVERTISEMENT

பவானிசாகா் 38.6, எலந்தகுட்டைமேடு 38.2, கோபி 35.2, குண்டேரிப்பள்ளம் 34.2, ஈரோடு 34, நம்பியூா் 29, கொடுமுடி 27.4, பவானி 27, பெருந்துறை 17, அம்மாபேட்டை 16, கவுந்தப்பாடி 12, மொடக்குறிச்சி 11, தாளவாடி 8, சென்னிமலை 4.

ADVERTISEMENT
ADVERTISEMENT