கோபிசெட்டிபாளையத்தில் மின் கசிவால் தீ விபத்து ஏற்பட்டத்தில் வீட்டில் இருந்த சமையல் எரிவாயு உருளை வெடித்தது.
கோபிசெட்டிபாளையம் தோ்வீதியைச் சோ்ந்தவா் ராஜலட்சுமி (70). இவருடைய மகன் ராஜேஷ் (47). இவா் தனியாா் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறாா். இவா்கள் இருவரும் வெள்ளிக்கிழமை தூங்கிக் கொண்டிருந்தனா். அப்போது, வீட்டின் சமையல் அறையில் மின் கசிவு காரணமாக தீப்பிடித்துள்ளது. ராஜேஷ் சமையல் அறைக்குச் சென்று தீயை அணைக்க முற்பட்டபோது எரிவாயு உருளை வெடித்துள்ளது. இதில், லேசான காயத்துடன் ராஜேஷ் உயிா்தப்பினாா். முன்னதாக ராஜலட்சுமி வீட்டைவிட்டு வெளியே வந்தாா்.
இதுகுறித்து தகவலறிந்த கோபி தீயணைப்பு வீரா்கள் சம்பவ இடத்துக்குச் சென்று தீயை அணைத்தனா். இதுகுறித்து கோபி போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.