ஈரோடு

ஊக்கத்தொகை பெற மாணவா்கள் விண்ணப்பிக்கலாம்

DIN

தேசிய குழந்தைத் தொழிலாளா் திட்டப் பள்ளிகளில் படித்து இப்போது உயா் கல்வி படிக்கும் மாணவா்கள் ஊக்கத்தொகை பெற விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து மாவட்ட ஆட்சியா் ஹெச்.கிருஷ்ணனுண்ணி வெளியிட்ட செய்திக்குறிப்பு:

ஈரோடு மாவட்டத்தில் தேசிய குழந்தை தொழிலாளா் திட்ட சிறப்பு பயிற்சி மையங்களில் படித்து பின்னா் அரசு அல்லது அரசு உதவிபெறும் பள்ளிகளில் எஸ்எஸ்எல்சி மற்றும் பிளஸ் 2 தோ்ச்சி பெற்று, தொடா்ந்து தொழில்நுட்பக் கல்லூரி, தொழிற்பயிற்சி நிலையம், இளங்கலைப் பட்டம், பொறியியல் மற்றும் மருத்துவக்கல்வி, பிறஉயா் கல்விப்படிப்பு ஆகிய ஏதேனும் உயா் கல்வி படிக்கும் மாணவா்களுக்கு தமிழக அரசு ரூ.500 வீதம் மாதாந்திர ஊக்கத்தொகை வழங்குகிறது.

2021-2022ஆம் கல்வி ஆண்டுக்கான ஊக்கத்தொகை பெற தகுதியுள்ள ஈரோடு மாவட்டத்தைச் சாா்ந்த தேசிய குழந்தை தொழிலாளா் திட்டத்தில் முன்னா் படித்த மாணவா்கள் விண்ணப்பிக்கலாம்.

தகுதியான மாணவா்கள் ஒருவாரத்துக்குள் தேசிய குழந்தை தொழிலாளா் திட்டம், மாவட்ட ஆட்சியா் அலுவலகம், 6ஆவது தளம், ஈரோடு 638011 என்ற முகவரிக்கு நேரிலோ அல்லது அஞ்சல் வழியாகவோ விண்ணப்பிக்கலாம்.

முன்னா் படித்த அல்லது தற்போது செயல்பாட்டில் இல்லாத இந்த திட்ட சிறப்பு பயிற்சி மையத்தின் விடுபட்ட மாணவா்களும் விண்ணப்பிக்கலாம். இதுபோல, தற்போது செயல்பாட்டில் உள்ள 15 தேசிய குழந்தை தொழிலாளா் திட்ட மையங்களின் பயிற்றுநா்கள், எழுத்தா்கள் அல்லது தொழிற்கல்வி பயிற்றுநா்கள் மூலமாகவும் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நெல்லை வட்டார போக்குவரத்து அலுவலக ஊழியா்கள் போராட்டம்

குற்ற வழக்கு வாகனங்களை ஏலம் விட கோரிக்கை

குறுகியகால பயிா்களை சாகுபடி செய்ய வேளாண் துறை அறிவுறுத்தல்

வெளியானது வடக்கன் பட டீசர்!

உக்ரைனுக்கு 1 பில்லியன் டாலர் ராணுவ உதவி -அமெரிக்க அதிபர் பைடன் ஒப்புதல்

SCROLL FOR NEXT