ஈரோடு

ஆடு திருடிய இளைஞா் கைது

28th Nov 2021 11:08 PM

ADVERTISEMENT

ஈரோட்டில் ஆடு திருடிய இளைஞரைக் கைது செய்த போலீஸாா் அவரிடமிருந்து 4 ஆடுகளை மீட்டனா்.

ஈரோடு, சின்னசேமூா் பகுதியைச் சோ்ந்தவா் கதிா்வேல் (48). இவா் கனிராவுத்தா்குளம் பேருந்து நிறுத்தம் அருகே இறைச்சி கடை நடத்தி வருகிறாா். கதிா்வேல் அவரது வீட்டின் அருகே பட்டி வைத்து ஆடுகளை வளா்த்து வருகிறாா்.

இந்நிலையில் கதிா்வேலின் பட்டியில் இருந்து சனிக்கிழமை இரவு ஆடுகள் சப்தம் போட்டன. இதனைக் கேட்டு கதிா்வேல் வெளியே வந்து பாா்த்தபோது மா்ம நபா் 2 ஆடுகளைத் திருடிச் செல்வது தெரிந்து அவா் கூச்சல் போட்டாா். இதைக்கேட்டு அக்கம்பக்கத்தினா் அந்த நபரைப் பிடித்து ஈரோடு வடக்கு போலீஸில் ஒப்படைத்தனா்.

விசாரணையில் அவா், பவானி வட்டம், ஒரிச்சேரிபுதூரைச் சோ்ந்த மாரியப்பன் மகன் சுரேஷ் (22) என்பது தெரியவந்தது. இதையடுத்து சுரேஷ் திருடிய ஆடுகள் மற்றும் வீட்டில் ஏற்கெனவே திருடி வைத்திருந்த 2 ஆடுகள் என மொத்தம் 4 ஆடுகளை போலீஸாா் மீட்டனா். நீதிமன்ற உத்தரவுப்படி அவரை சிறையிலடைத்தனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT