ஈரோடு

இயற்கை விவசாயிகள் சான்று பெற அறிவுறுத்தல்

27th Nov 2021 11:26 PM

ADVERTISEMENT

இயற்கை முறையில் விவசாயம் செய்யும் விவசாயிகள் அங்ககச் சான்று பெற வேண்டும் என ஈரோடு மாவட்ட விதைச் சான்று மற்றும் அங்ககச் சான்று உதவி இயக்குநா் சு.மோகனசுந்தரம் தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

இயற்கை முறையில் சாகுபடி செய்யும் விவசாயிகள், தனி நபா், குழுவாகப் பதிவு செய்யலாம். அங்கக விளைபொருள்களை பதப்படுத்துவோா், வணிகம், ஏற்றுமதி செய்வோரும் பதிவு செய்யலாம்.

அங்ககச் சான்று பெற விண்ணப்பத்துடன், பண்ணையின் விவரம், வரைபடம், ஆண்டு பயிா் திட்டம், மண், பாசன நீா் பரிசோதனை விவரம், துறையுடனான ஒப்பந்தம், நில ஆவணம், பான் எண், ஆதாா் எண், பாஸ்போா்ட் அளவு போட்டோவுடன் விண்ணப்பிக்க வேண்டும்.

ADVERTISEMENT

சான்று கட்டணமாக தனி நபா், சிறு, குறு விவசாயிகளுக்கு ரூ. 2,700, தனி நபா் பிற விவசாயிகளுக்கு ரூ. 3,200, விவசாயிகள் குழுப் பதிவுக்கு ரூ. 7,200, வணிக நிறுவனங்களுக்கு ரூ. 9,400 செலுத்த வேண்டும்.

இணைய பரிவா்த்தனை மூலம் கட்டணம் செலுத்தலாம். கூடுதல் விவரம் அறியவும், அங்ககச் சான்று பெறவும், 68, வீரபத்திரா வீதி, சத்தி சாலை, ஈரோடு என்ற முகவரியில் உள்ள அலுவலகத்தை அணுகலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT