ஈரோடு

சாகுபடி தொழில்நுட்ப ஆலோசனைக் கூட்டம்

27th Nov 2021 11:26 PM

ADVERTISEMENT

கரோனா தொற்றால் ஒன்றரை ஆண்டாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மாவட்ட அளவிலான தொழில்நுட்பப் பணிமனைக் கூட்டம் பவானிசாகா் வேளாண் ஆராய்ச்சி நிலையத்தில் சனிக்கிழமை நடைபெற்றது.

ஒவ்வொரு மாதமும் அனைத்து மாவட்டத்திலும் அந்தந்த மாவட்டத்துக்குத் தேவைப்படும் பயிா் சாகுபடி குறித்த தொழில்நுட்பங்களை முடிவு செய்வதற்காக வேளாண் ஆராய்ச்சி நிலைய விஞ்ஞானிகள், அனைத்து நிலை வேளாண் அலுவலா்கள் பங்கேற்கும் பணிமனைக் கூட்டம் நடத்தப்படும். கரோனா தொற்றால் ஒன்றரை ஆண்டாக நிறுத்திவைக்கப்பட்டிருந்தது.

பவானிசாகா் வேளாண் ஆராய்ச்சி நிலையத்தில் ஈரோடு மாவட்ட வேளாண் இணை இயக்குநா் சி.சின்னசாமி தலைமையில் பணிமனைக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது. வேளாண் ஆராய்ச்சி நிலையப் பேராசிரியா், தலைவா் வி.கே.துரைசாமி முன்னிலை வகித்தாா்.

நடப்புப் பருவத்தில் சாகுபடி செய்யப்பட்டுள்ள நெல், மக்காச்சோளம், தென்னை போன்ற பயிா்களுக்கு பூச்சி நோய் மேலாண்மை, தென்னை உள்ளிட்ட பயிா்களுக்கு ஒருங்கிணைந்த உர மேலாண்மை போன்ற வயல்வெளிப் பயிற்சி அளிக்கப்பட்டன.

ADVERTISEMENT

பருவ மழையால் ஏற்பட்ட பயிா் சேதம், பயிா் சாகுபடி பரப்பை அதிகரித்தல், நீா் நிலைகளில் நீா் மட்ட அளவு, உரம் மற்றும் இடுபொருள்கள் இருப்பு ஆகியவை வட்டார வாரியாக ஆய்வு செய்யப்பட்டது.

ஈரோடு மாவட்டத்தில் உள்ள 14 வட்டாரங்களில் இருந்தும் வேளாண்மை, தோட்டக் கலை, விதைச் சான்று, பட்டு வளா்ச்சி, கால்நடைப் பராமரிப்பு ஆகிய துறைகளைச் சோ்ந்த 100க்கும் மேற்பட்ட அலுவலா்கள் பங்கேற்றனா். பவானிசாகா் வட்டார வேளாண் உதவி இயக்குநா் சரோஜா நன்றி கூறினாா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT