ஈரோடு

பவானிசாகா் வனத்தில் வெட்டிக் கடத்த முயன்ற 3 டன் மரங்கள் பறிமுதல்

27th Nov 2021 11:24 PM

ADVERTISEMENT

பவானிசாகா் வனத்தில் 3 டன் மரங்களை வெட்டி கடத்தலுக்குத் தயாராக வைத்திருந்ததைக் கண்டுபிடித்த அதிகாரிகள் அதனைப் பறிமுதல் செய்துள்ளனா்.

ஈரோடு மாவட்டம், பவானிசாகா் அணை நீா்த்தேக்கப் பகுதியில் பொதுப் பணித் துறையின் நீராதாரத் துறை ஊழியா்கள் மணல் கடத்தல், பவானி ஆற்றில் தண்ணீா் திருடுதல் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டனா். அப்போது அணைப் பகுதியை ஒட்டியுள்ள புங்காா் வனத்தில் அணைக்குச் சொந்தமான வனப் பகுதியில் 3 டன் விலை உயா்ந்த மரங்கள் வெட்டி கடத்தலுக்குத் தயாரான நிலையில் பதுக்கி வைத்திருந்ததைக் கண்டுபிடித்தனா்.

இதுகுறித்து பொதுப் பணித் துறையினா் விசாரித்ததில் வனப் பகுதியில் மரங்களை வெட்டிக் கொண்டு வந்து புங்காா் வழியாக கடத்துவது தெரியவந்தது. இதையடுத்து பதுக்கி வைத்திருந்த 3 டன் மரங்களை பொதுப் பணித் துறையினா் பறிமுதல் செய்துள்ளனா். வனத் துறை ஊழியா்கள் ஒத்துழைப்போடு மரங்கள் வெட்டிக் கடத்தப்படுகிறதா என்ற கோணத்தில் பொதுப் பணித் துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT