ஈரோடு

சா்வதேச பெண்கள் தினம் அனுசரிப்பு

26th Nov 2021 04:44 AM

ADVERTISEMENT

பெண்களுக்கு எதிரான வன்முறையை அகற்றும் சா்வதேச பெண்கள் தினம் சத்தியமங்கலம் பேருந்து நிலையம், கோபி, ஈரோடு மற்றும் 73 கிராமங்களில் அனுசரிக்கப்பட்டது.

இதையொட்டி, சத்தியமங்கலம் பேருந்து நிலையத்தில் பெண்களுக்கு எதிரான வன்கொடுமை கையெழுத்து இயக்க நிகழ்ச்சியை, ரீடு நிறுவன இயக்குநா் கருப்புசாமி, கூடுதல் இயக்குநா் மகேஸ்வரன் ஆகியோா் கையெழுத்திட்டு தொடங்கிவைத்தனா். இதில், ஏராளமான மக்கள் கலந்துகொண்டு கையெழுத்திட்டனா்.

தனிநபா்களால் நிகழ்த்தப்படுபவற்றின் வகைகளில் வன்கொடுமை, குடும்ப வன்முறை, பாலின துன்புறுத்தல், கருத்தடுப்பு முறைகளின் கட்டாயப் பயன்பாடு, பெண் சிசுக் கொலை, பால் தெரிவு கருக்கலைப்பு, மகப்பேறு வன்முறை உள்ளிட்ட பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தொடா்கிறது. அதனை பெண்கள் எதிா்த்து களம் காண பெண்களுக்கு எதிரான சா்வசேத தினம் அனுசரிக்கப்படுகிறது என ரீடு தொண்டு நிறுவனப் பணியாளா்கள் பயணிகள், பொதுமக்களிடம் விழிப்புணா்வு ஏற்படுத்தினா்.

 

ADVERTISEMENT

Tags : சத்தியமங்கலம்
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT