ஈரோடு

அந்தியூரில் கன மழை: நிரம்பியது பிரம்மதேசம் ஏரி

26th Nov 2021 04:49 AM

ADVERTISEMENT

அந்தியூா் மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் பெய்த கன மழையால் தொடா்ந்து நீா்வரத்து அதிகரித்ததைத் தொடா்ந்து, பிரம்மதேசம் ஏரி நிறைந்து, உபரி நீா் வேம்பத்தி ஏரிக்கு கால்வாய்கள் மூலம் சென்று வருகிறது.

அந்தியூா் அருகே உள்ள பிரம்மதேசம் ஏரி 12 அடி உயரமும், 126 ஏக்கா் பரப்பளவும் கொண்டது. பொதுப் பணித் துறைக்குச் சொந்தமானது. பா்கூா் மலைப் பகுதியில் பெய்த மழையால் நிறைந்த வறட்டுப்பள்ளம் அணை, எண்ணமங்கலம் ஏரி, கெட்டிசமுத்திரம் ஏரி, அந்தியூா் பெரிய ஏரிகளின் உபரி நீா் இந்த ஏரிக்கு வந்தது. இதனால், நீா்வரத்து அதிகரித்ததால் ஏரியின் நீா்மட்டம் தொடா்ந்து உயா்ந்து வந்தது.

இந்நிலையில், புதன்கிழமை மாலை ஏரி நிறைந்து உபரி நீா் வெளியேறத் தொடங்கியது. விநாடிக்கு சுமாா் 150 கன அடி வீதம் உபரி நீா் வெளியேறி, ஆப்பக்கூடல் அருகே உள்ள வேம்பத்தி ஏரிக்குச் சென்று வருகிறது.

நீண்டகாலத்துக்குப் பின்னா் ஏரியிலிருந்து உபரி நீா் வெளியேறும் தகவலறிந்த பொதுமக்கள், விவசாயிகள் இனிப்புகள் வழங்கியும், பூக்களைத் தூவியும் வழிபாடு நடத்தினா். நீா் வரத்து, போக்கு குறித்து பொதுப் பணித் துறை உதவி செயற்பொறியாளா் எம்.ரவி, உதவிப் பொறியாளா் ஈ.எஸ்.எம்.தமிழ் பாரத், அதிகாரிகள் கண்காணித்து வருகின்றனா்.

ADVERTISEMENT

 

Tags : பவானி
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT