ஈரோடு

தமாகா சாா்பில் மரக்கன்றுகள் நடவு

23rd Nov 2021 11:04 PM

ADVERTISEMENT

தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி சாா்பில் சித்தோட்டை அடுத்த நசியனூரில் தேசிய நெடுஞ்சாலையோரத்தில் மரக்கன்றுகள் திங்கள்கிழமை நடவு செய்யப்பட்டன.

மறைந்த தமாகா தலைவா் ஜி.கே.மூப்பனாரின் பிறந்த நாளை முன்னிட்டு தமிழகம் முழுவதும் ஒரு லட்சம் மரக்கன்றுகள் நடும் திட்டத்தை தமாக தலைவா் ஜி.கே.வாசன் தொடங்கிவைத்தாா். இதன் தொடா்ச்சியாக, சேலம் - கோவை தேசிய நெடுஞ்சாலையில் நசியனூா் தொடங்கி ஆட்டையாம்பட்டி வரையில் 150க்கும் மேற்பட்ட மரக்கன்றுகள் நடப்பட்டு, பாதுகாப்பு வேலிகள் அமைக்கப்பட்டன.

இந்நிகழ்ச்சிக்கு, ஈரோடு மத்திய மாவட்டத் தலைவா் பி.விஜயகுமாா் தலைமை வகித்தாா். மாநில பொதுக் குழு உறுப்பினா் கே.எம்.ஈஸ்வரமூா்த்தி, மாநில விவசாய அணிச் செயலாளா் எஸ்.எஸ்.முருகேசன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். மாநில பொதுச் செயலாளா் விடியல் எஸ்.சேகா், மாநில செயற்குழு உறுப்பினா் எஸ்.டி.சந்திரசேகா், மாநில இளைஞரணித் தலைவா் எம்.யுவராஜா ஆகியோா் மரக்கன்றுகளை நட்டனா்.

இதில், மாவட்ட விவசாய அணித் தலைவா் பி.சம்பத்குமாா், மாவட்டப் பொதுச் செயலாளா்கள் ரபீக், எஸ்.ஸ்ரீதா், வட்டாரத் தலைவா்கள் பி.புவனேஸ்வரன், சன்னியாசிபட்டி பழனிசாமி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

ADVERTISEMENT

 

 

 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT