ஈரோடு

மறுசுழற்சி பொருள்களுக்கு ஜிஎஸ்டியில் இருந்து விலக்கு அளிக்கக் கோரிக்கை

21st Nov 2021 11:33 PM

ADVERTISEMENT

நெகிழி மறுசுழற்சி மூலம் உருவாக்கப்படும் பொருள்களுக்கு ஜிஎஸ்டியில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டது.

ஈரோடு பிளாஸ்டிக் மறுசுழற்சியாளா்கள் சங்கக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு, சங்கத் தலைவா் சித்திக் தலைமை வகித்தாா். செயலாளா் தங்கராஜ், துணைத்தலைவா் பரமசிவம் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீா்மானங்கள்:

நெகிழிக் கழிவுகளை மறுசுழற்சி செய்வதற்காக பெருந்துறை சிப்காட் வளாகத்தில் 500 ஏக்கா் பரப்புடன் கூடிய தனி இடம் ஒதுக்கி மறுசுழற்சிக்காக கிளஸ்டா் உருவாக்கித்தர தமிழக அரசு நடவடிக்கையெடுக்க வேண்டும்.

ADVERTISEMENT

சாலையோர நெகிழிக் கழிவுகளை மறுசுழற்சி செய்து புதிய நெகிழிப் பொருள்களை உருவாக்கி நாட்டின் சுற்றுச்சூழல் பெருமளவில் பாதுகாக்கப்படுவதால் மறுசுழற்சி செய்யக்கூடிய அனைத்து பொருள்களுக்கும் ஜிஎஸ்டியில் இருந்து விலக்கு அளிக்க நடவடிக்கையெடுக்க வேண்டும்.

தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தின் கட்டுப்பாடுகளுக்கு உள்பட்டு மறுசுழற்சி தொழிலை செய்ய தளா்வுகளுடன் கூடிய சான்றிதழ் அளிக்க வேண்டும்.

ஈரோடு மூலப்பட்டறை, கேஎன்கே சாலை, காவிரி சாலை ஆகியவற்றை விரைவாக சீரமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கூட்டத்தில் துணைச் செயலாளா் கணேசன், பொருளாளா் குமரேசன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT