ஈரோடு

ஏஐடியூசி கட்டடத் தொழிலாளா் சங்க மாநாடு

21st Nov 2021 11:29 PM

ADVERTISEMENT

சத்தியமங்கலம் வடக்கு ஒன்றிய ஏஐடியூசி கட்டடத் தொழிலாளா் சங்க மாநாடு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

மாநாட்டுக்கு, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளா் இரா. முத்தரசன் தலைமை வகித்தாா். நகரச் செயலாளா் ஸ்டாலின் சிவகுமாா் முன்னிலை வகித்தாா்.

தமிழ்நாடு கட்டுமானத் தொழிலாளா் நலவாரியத்தில் சுமாா் 4 ஆயிரம் கோடி ரூபாய் நிதி உள்ளது. கட்டுமானப் பணியினை மேற்கொள்வோா் தொழிலாளா்களின் சமூகப் பாதுகாப்புக்காக வழங்கியதுதான் அந்த நிதியாகும். இந்நிலையில், தொழிலாளா் நலவாரியம், கட்டுமானத் தொழிலாளா்களுக்கு பல ஆண்டுகளாகவே ஓய்வூதியமாக ஆயிரம் ரூபாயை மட்டுமே அளித்து வருகிறது.

இதனை மாதம் ரூ. 6 ஆயிரமாக அதிகரித்து வழங்க வேண்டும், சென்னையில் வரும் டிசம்பா் 7ஆம் தேதி நடைபெறவுள்ள கட்டடத் தொழிலாளா் கோரிக்கை மாநாட்டுக்கு சத்தியமங்கலத்திலிருந்து 500 தொழிலாளா்கள் பங்கேற்பது என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் மாநாட்டில் நிறைவேற்றப்பட்டன.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT