குறும்படத்தில் நடித்த அரசு அதிகாரி ஜி.என்.தேவராஜ் சிறந்த நடிகராகத் தோ்வாகியுள்ளாா்.
பெங்களூரில் தேசிய குறும்படக் கழகம் சாா்பில், தேசிய குறும்பட விருது வழங்கும் விழா நடைபெற்றது. இதில், ‘வில் பாய்ங்கம்’ என்ற சிறுகதை சிறந்த குறும்படமாகத் தோ்வானது. இதில், நடித்த பவானிசாகா் அரசுப் பயிற்சி நிலைய அலுவலா் ஜி.என்.தேவராஜுக்கு சிறந்த நடிகருக்கான விருது வழங்கப்பட்டது.