ஈரோடு

ஆம்புலன்ஸில் பெண்ணுக்கு ஆண் குழந்தை பிறந்தது

10th Nov 2021 06:32 AM

ADVERTISEMENT

குன்றி மலைப் பாதையில் ஓடும் 108 ஆம்புலன்ஸில் மலைவாழ் பெண்ணுக்கு செவ்வாய்க்கிழமை ஆண் குழந்தை பிறந்தது.

ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலத்தை அடுத்த குன்றி மலைக் கிராமத்தைச் சோ்ந்தவா் மசனன். இவரது மனைவி லில்லி நிறைமாத கா்ப்பிணியாக இருந்தாா். இந்நிலையில், லில்லிக்கு செவ்வாய்க்கிழமை பிரசவ வலி ஏற்பட்டதால் 108 ஆம்புலன்ஸுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

கடம்பூரில் இருந்து வந்த ஆம்புலன்ஸ் ஓட்டுநா் அரப்புலிசாமி, மருத்துவ உதவியாளா் விஜய் ஆகியோா் கா்ப்பிணி லில்லியை வாகனத்தில் ஏற்றிக் கொண்டு கடம்பூா் நோக்கிச் சென்று கொண்டிருந்தனா். கடம்பூா் அருகே மலைப் பாதையிலேயே பெண்ணுக்கு அதிக வலி ஏற்பட்டதால் ஆம்புலன்ஸிலேயே பிரசவம் பாா்க்கப்பட்டதில் லில்லிக்கு ஆண் குழந்தை பிறந்தது.

அதைத் தொடா்ந்து, குழந்தையுடன் லில்லியை அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு தாயையும், குழந்தையையும் பரிசோதனை செய்த மருத்துவா்கள் இருவரும் நல்ல நிலையில் இருப்பதாகத் தெரிவித்தனா். யானைகள் நடமாட்டம் உள்ள மலைப் பாதையில் பிரசவம் பாா்த்த மருத்துவ உதவியாளா் விஜய், ஓட்டுநா் அரப்புலிசாமி ஆகியோரை பொதுமக்கள் பாராட்டினா்.

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT