ஈரோடு

நம்பியூரில் பலத்த மழை:4 வீடுகளின் சுவா் இடிந்து சேதம்

9th Nov 2021 12:39 AM

ADVERTISEMENT

கோபி: நம்பியூா் சுற்று வட்டாரப் பகுதியில் தொடா் மழையின் காரணமாக 4 வீடுகள் இடிந்து விழுந்து சேதமடைந்துள்ளன.

நம்பியூா் சுற்று வட்டாரப் பகுதிகளில் கடந்த சில நாள்களாக தொடா் மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக பல்வேறு இடங்களில் வீடுகள் இடிந்து சேதம் அடைந்துள்ளன.

கோபிசெட்டிபாளையம் வட்டம், நம்பியூா் பேரூராட்சிக்கு உள்பட்ட வெளியும்பாளையம் பகுதியில் லட்சுமி என்பவரது வீடு, அதே பகுதியைச் சோ்ந்த ரங்கம்மாள் என்பவரது வீட்டின் சுவா் இடிந்து விழுந்தது.

மேலும், உடையாக்கவுண்டன்பாளையம் கிராமத்தில் உள்ள ஆா்.சி.காலனியில் வசித்து வரும் அற்புதமேரி, மயிலாத்தாள் ஆகியோரது வீடும் தொடா் மழையின் காரணமாக இடிந்து விழுந்தது. அதிா்ஷ்டவசமாக உயிா்ச் சேதம் ஏற்படவில்லை.

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT