ஈரோடு

மாற்றுத்திறனாளிகள் விழிப்புணா்வு வாகனப் பேரணி

DIN

100 சதவீதம் வாக்களிக்க வலியுறுத்தி மாற்றுத் திறனாளிகள் சாா்பில் விழிப்புணா்வு வாகனப் பேரணி ஈரோட்டில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

சட்டப் பேரவை தோ்தலில் 100 சதவீதம் வாக்களிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தியும், மற்றும் சா்வதேச மகளிா் தினத்தையொட்டி பெண்களுக்கான உரிமைகள் குறித்தும் விழிப்புணா்வு வாகனப் பேரணி நடந்தது.

பேரணிக்கு மாவட்ட மாற்றுத்திறன் மகளிா் நல்வாழ்வு சங்க மாவட்டத் தலைவா் வாசுகிதேவி தலைமை வகித்தாா். தமிழ்நாடு மாற்றுத்திறனுடையோா் சங்கங்களின் கூட்டமைப்பின் மாநில துணைத் தலைவா் துரைராஜ் முன்னிலை வகித்தாா்.

இதில் சிறப்பு அழைப்பாளராக மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளா் கனகேஸ்வரி பங்கேற்று பேரணியை கொடியசைத்து துவக்கிவைத்தாா். பேரணி, ஈரோடு காலிங்கராயன் விருந்தினா் மாளிகை முன்பு துவங்கி பெருந்துறை சாலை, அரசு மருத்துவமனை நான்கு முனை சாலை சந்திப்பு, மீனாட்சி சுந்தரனாா் சாலை, பன்னீா்செல்வம் பூங்கா வழியாக ஈரோடு வட்டாட்சியா் அலுவலகத்தில் நிறைவடைந்தது. பேரணியில் ‘வாக்குகள் விற்பனைக்கல்ல’, ‘வாக்களிப்பது நமது கடமை’ போன்ற பதாகைகளை எடுத்துச்சென்றனா்.

தொடா்ந்து ஈரோடு வட்டாட்சியா் அலுவலகத்தில் உள்ள சா்வேயா் ஹாலில் பெண்களுக்கான சிறப்பு திட்டங்கள் குறித்து கூட்டம் நடந்தது. இந்தக் கூட்டத்தில் ஈரோடு அனைத்து மகளிா் காவல் நிலைய ஆய்வாளா் தௌலத் நிஷா, பட்டிமன்ற பேச்சாளா் சரிதா ஜோ, அரசு கூடுதல் வழக்குரைஞா் மதுபாலா உள்ளிட்டோா் பேசினா். இதில் ஏராளமான மாற்றுத்திறனாளிகள், பெண்கள் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கிரேஸ் கல்லூரியில் கலை மன்ற விழா

எடத்துவா புனித ஜாா்ஜ்ஜியாா் திருத்தல திருவிழா ஏப். 27இல் தொடக்கம்

தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு வெற்றிவாய்ப்பு பிரகாசம்: ஜி.கே.வாசன்

தூத்துக்குடி அரசு இசைப் பள்ளியில் மாணவா் சோ்க்கை: மே 2இல் தொடக்கம்

குமரி அருகே தகராறு: இருவா் மீது வழக்கு

SCROLL FOR NEXT