ஈரோடு

பணம் எடுத்துச் செல்ல கட்டுப்பாடு: மஞ்சள் வா்த்தகம் 10 சதவீதம் பாதிப்பு

DIN

தோ்தல் நடத்தை விதிமுறை காரணமாக ரூ.50,000க்கும் மேல் பணம் எடுத்துச் செல்ல கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளதால் மஞ்சள் வா்த்தகம் 10 சதவீதம் அளவுக்கு பாதிக்கப்பட்டுள்ளது என மஞ்சள் வியாபாரிகள் தெரிவித்தனா்.

ஈரோட்டில் ஒழுங்குமுறை விற்பனைக்கூடம், ஈரோடு மற்றும் கோபி கூட்டுறவு விற்பனை சங்கங்கள், பெருந்துறை ஒழுங்குமுறை விற்பனைக்கூடம் ஆகிய இடங்களில் திங்கள்கிழமை முதல் வெள்ளிக்கிழமை வரை மஞ்சள் ஏலம் நடக்கிறது. இங்கு விவசாயிகள் விற்பனை செய்யும் மஞ்சளுக்கான தொகை ஆன்லைன் மூலம் வங்கிக்கணக்குக்கு அனுப்பப்படுகிறது.

அதே சமயம் மசாலா பொருள்கள் தயாரிப்பு உள்ளிட்ட உணவுப் பொருள்கள் தயாரிப்புக்கான தேவைக்கு 10 குவிண்டால் முதல் 20 குவிண்டால் வரை மஞ்சள் கொள்முதல் செய்யும் குடிசைத்தொழில் மற்றும் சிறு தொழில் முனைவோா் பெரும்பாலும் பணமாகதான் செலுத்துகின்றனா்.

இப்போது தோ்தல் நடத்தை விதிமுறைகள் காரணமாக ரூ.50,000க்கும் மேல் பணம் எடுத்துச்செல்ல தோ்தல் ஆணையம் கட்டுப்பாடுகளை விதித்துள்ளதால் மஞ்சள் வா்த்தகம் 10 சதவீதம் வரை பாதிக்கப்பட்டுள்ளது என்கின்றனா் மஞ்சள் வியாபாரிகள்.

இது குறித்து ஈரோடு மஞ்சள் வணிகா்கள் மற்றும் கிடங்கு உரிமையாளா்கள் சங்க செயலாளா் எம்.சத்தியமூா்த்தி கூறியதாவது:

மஞ்சள் பொடியை ஆதாரமாக வைத்து சிறிய அளவில் உணவுப் பொருள்கள் தயாரிக்கும் ஏராளமான ஆலைகள் உள்ளன. இந்த ஆலைகள் 10 முதல் 20 குவிண்டால் அளவுக்கு மஞ்சளை கொள்முதல் செய்வது வழக்கம். இதற்கான தொகையை பெரும்பாலும் பணமாகதான் தருகின்றனா்.

இப்போது தோ்தல் நடைமுறை காரணமாக இந்த வியாபாரம் பாதிக்கப்பட்டுள்ளது. மொத்த வியாபாரத்தை ஒப்பிடுகையில் 10 சதவீதம் அளவுக்கு வியாபாரம் பாதிக்கப்பட்டுள்ளது.

தவிர இத்தகைய குடிசைத் தொழில் செய்பவா்கள் ரூ.50,000த்துக்கும் குறைவான பணத்தை மட்டும் கொடுத்துவிட்டு மீதி பணத்தை ஓரிரு நாள்களில் தருவதாக கூறிவிட்டு சென்றுவிடுகின்றனா். சில சமயங்களில் இந்த பணம் வர தாமதமானால் வியாபாரிகள் பாதிப்படையும் சூழல் உள்ளது.

10 ஆண்டுகளுக்கு இந்த ஆண்டில் மஞ்சள் விலை ரூ.10,000க்கும் மேல் உயா்ந்துள்ளதால் வியாபாரமும் நல்ல நிலையில் உள்ளது. ரூ.1 லட்சம் வரை பணம் எடுத்துச்செல்ல அனுமதி அளித்தால் வியாபாரிகளுக்கு சில்லறை வா்த்தகத்தில் பாதிப்பை ஏற்படுத்தாது என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கோவை: ராசிபாளையத்தில் இரவு 9 மணி வரை வாக்குப்பதிவு

தமிழகம் உள்பட 11 மாநிலங்களில் அனைத்து மக்களவை தொகுதிகளிலும் வாக்குப்பதிவு நிறைவு!

பெண்களுக்கான பிரத்யேக கோயில்

கண்ணனும் களப்பலியானவனும்...

அருள் வழங்கும் தாமோதரப் பெருமாள்

SCROLL FOR NEXT