ஈரோடு

வேளாண் கல்லூரி மாணவிகளின்கிராம தங்கல் திட்டம்

DIN

கிராம தங்கல் திட்டத்தின்கீழ் குமரகுரு வேளாண் கல்லூரி மாணவிகள் விவசாயிகளுடன் இணைந்து விவசாய முறைகள் குறித்து சனிக்கிழமை பயிற்சி பெற்றனா்.

பவானிசாகா் பகுதியில் உள்ள தொட்டம்பாளையத்தில் விவசாயி மயில்சாமி வயலில் திருந்திய நெல் சாகுபடி குறித்த செயல்விளக்கம் அளித்தனா். திருந்திய நெல் சாகுபடி குறித்து வேளாண் மாணவிகள் கூறுகையில், திருந்திய நெல் சாகுபடி முறையில் ஒரு குத்துக்கு ஒரு நாற்று என்ற முறையில் 22.5 செ.மீ இடைவெளியில் நடவு செய்ய வேண்டும். கோனோவீடா் கொண்டு களையெடுக்க வேண்டும். நீா்மறைய நீா்கட்ட வேண்டும். இதனால் தூா்கள் அதிகமாகப் பிடித்து வளிப்பான கதிா்களைக் கொண்டு நன்கு திரண்ட நெல்மணிகளை அதிகமாகப் பெறலாம். இதற்கான உரங்களை இலை வண்ண அட்டையைப் பயன்படுத்தி சரியான கால இடைவெளியில் பிரித்திட்டு பராமரித்து வந்தால் அதிக மகசூலைப் பெறலாம் என்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பள்ளத்தில் சிக்கிய கும்பகோணம் சாரங்கபாணி கோயில் தேர்!

காதலிக்க யாருமில்லையா..?

திருவிடந்தை நித்ய கல்யாண பெருமாள் கோயிலில் கொடியேற்றம்!

உருப்பெருக்கி வைத்துப் பார்க்கும் அளவில் பதஞ்சலி மன்னிப்பு விளம்பரம்: உச்ச நீதிமன்றம் கண்டனம்

இது சஹீரா வைப்ஸ்!

SCROLL FOR NEXT