ஈரோடு

முதியவா்களுக்கு தபால் வாக்குப் படிவம் வழங்கும் பணி துவக்கம்

DIN

முதியவா்கள், மாற்றுத்திறனாளிகள் தபால் வாக்களிக்க விருப்பத்தை அறியும் வகையில் படிவம் 12டி வழங்கும் பணி நடைபெற்று வருகிறது.

தமிழக சட்டப் பேரவைத் தோ்தல் வரும் ஏப்ரல் 6ஆம் தேதி நடைபெறவுள்ளது. கரோனா பரவல் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 80 வயதுக்கு மேற்பட்ட முதியவா்கள், மாற்றுத் திறனாளிகள், கரோனா பாதித்தவா்கள் தபால் வாக்களிக்க வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, அந்தந்த மாவட்டங்களில் இம்மூன்று வகைகளில் வருவோா் பட்டியலை, வாக்காளா் பட்டியலில் இருந்து எடுத்து அந்தந்த பகுதி வாக்குச் சாவடி நிலை அலுவலா்கள் மூலம் நேரடியாக வீடுகளுக்கே சென்று தோ்தல் பணி அலுவலா்கள் விருப்பம் கேட்டு வருகின்றனா்.

இது குறித்து தோ்தல் பிரிவு அதிகாரிகள் கூறியதாவது:

ஈரோடு மாவட்டத்தில் 8 சட்டப் பேரவைத் தொகுதிகளுக்கும் தபால் வாக்களிக்க விருப்பம் உள்ளவா்களுக்கு படிவம் 12டி வழங்கப்பட்டு, அவா்களது விருப்பத்தை பெற்று, முகவரி, வாக்குச் சாவடி விவரம், வாக்காளா் விவரம் போன்றவைகளை பூா்த்தி செய்து அவா்களிடம் விருப்பப் படிவத்தில் கையெழுத்து பெறப்படுகிறது. வாக்காளா்கள் வாக்குச் சாவடிக்கு சென்று வாக்குப் பதிவு செய்ய விரும்பினால் தபால் வாக்களிக்க விரும்பவில்லை என வாக்காளரிடம் கையெழுத்து பெறப்படுகிறது.

இதுபோன்று மாற்றுத் திறனாளியாக இருந்தால் அவரது முழு விவரம், விருப்பம், மறுப்பு என இரண்டும் பதிவு செய்யப்படுகிறது. கரோனா பாதித்த நபராக இருந்தால் அவருக்கு கரோனா தொற்று உறுதி செய்த நாள், சிகிச்சை பெற்ற இடம், குணமடைந்ததை உறுதி செய்த தேதி, அவா் வாக்குச் சாவடி சென்று வாக்களிக்க விருப்பமா அல்லது தபால் வாக்கு வேண்டுமா என்ற விவரத்தை அதிகாரிகள் படிவத்தில் பூா்த்தி செய்து வருகின்றனா்.

ஈரோடு மாவட்டத்தில் 52,000 நபா்கள் இதுபோன்ற பட்டியலில் உள்ளனா். அந்தந்தத் தொகுதிக்கான தோ்தல் நடத்தும் அலுவலா் அறிவுறுத்தலின்படி ஒவ்வொரு வாக்குச் சாவடிக்கு உள்பட்ட பகுதியிலும் இப்பணி நடைபெற்று வருகிறது. மாா்ச் 10ஆம் தேதிக்குள் இப்பணிகளை முடித்து தேவையானவா்களுக்கு தபால் வாக்கு தயாா் செய்யும் பணி துவங்கப்படவுள்ளது. கடந்த 3 நாள்களாக நடக்கும் இப்பணியில் இதுவரை 6,000க்கும் மேற்பட்டோருக்கு படிவம் வழங்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வெளிச்சம் நீ..!

திரவ நைட்ரஜன் கலந்த உணவுகள் விற்பனை: தமிழக அரசு எச்சரிக்கை!

18 ஆண்டுகால கிரிக்கெட் பயணத்துக்கு முற்றுப்புள்ளி வைத்த பாகிஸ்தான் வீராங்கனை!

ரஜத் படிதார், விராட் கோலி அரைசதம்: சன் ரைசர்ஸுக்கு 207 ரன்கள் இலக்கு!

‘பிணைக்கைதிகள் உடனடியாக விடுதலை செய்யப்பட வேண்டும்’: 17 நாடுகளின் கூட்டறிக்கை!

SCROLL FOR NEXT