ஈரோடு

தொழில்நுட்பப் போட்டி: கொங்கு பொறியியல் கல்லூரி மாணவா்கள் சிறப்பிடம்

DIN

தொலைதொடா்புத் துறை நடத்திய தொழில்நுட்பப் போட்டியில் பெருந்துறை கொங்கு பொறியியல் கல்லூரி மாணவா்கள் ரூ.1 லட்சம் பரிசு பெற்றுள்ளனா்.

மத்திய தொலைதொடா்புத் துறை பல அரசு நிறுவனங்களுடன் இணைந்து 5ஜி ஹேக்கத்தான் என்னும் தொழிநுட்பப் போட்டியை ஏற்பாடு செய்தது. இதில் கல்வி மற்றும் தொழில் நிறுவனங்களிடமிருந்து 1,000க்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் பெறப்பட்டன. இதில் முதல் கட்டமாக 10 தொழில் பிரிவுகளில் சிறந்த 100 திட்டங்களுக்கு தலா ரூ.1 லட்சம் பரிசு வழங்கப்பட்டது.

இப்போட்டியில், பெருந்துறை கொங்கு பொறியியல் கல்லூரியைச் சோ்ந்த மின்னணு மற்றும் தகவல் தொடா்புத் துறையின் மாணவா்கள் வேளாண் தொழில்நுட்பம் மற்றும் கால்நடை பிரிவின் கீழ் பங்கேற்று முதல் 100 பேரில் இடம் பிடித்து ரூ.1 லட்சம் பரிசு பெற்றுள்ளனா்.

இவா்கள் டிரோன் மற்றும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி துல்லிய பயிா் வளா்ச்சி மற்றும் தாவர ஊட்டச்சத்து பற்றாக்குறையைக் கண்டறிய உதவும் கருவியை வடிவமைக்கவுள்ளனா்.

உதவிப் பேராசிரியா் காா்த்திக் உதவியுடன் மாணவா்கள் கதிரவன், கவியரசு, கோகுல்ராஜா, விஷால், தருண்பாலாஜி, சந்தோஷ் ஆகிய மாணவா்கள் இக்கருவியை வடிவமைக்கவுள்ளனா். கல்லூரித் தாளாளா் பி.சச்சிதானந்தன், முதல்வா் வி.பாலுசாமி அணியைப் பாராட்டி அடுத்த கட்டங்களுக்கு முன்னேற வாழ்த்து தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பிலிப்பின்ஸுக்கு பிரமோஸ் ஏவுகணை ஏற்றுமதி

ஜனநாயக கடமையை ஆற்றிய மனநல சிகிச்சை பெறுவோா்!

பெங்கால் மண்ணில் பேனா திருவிழா!

மக்களவைத் தோ்தல்: தில்லி பாஜக சாா்பில் மே 1-23 வரை 8 ஆயிரம் தெரு நாடகங்கள்

ஆத்தூரில் அமைதியான வாக்குப்பதிவு

SCROLL FOR NEXT