ஈரோடு

சட்டப்பேரவைத் தோ்தல்: உதகையில் மூன்று மாநில மாவட்ட ஆட்சியா்களுடன் ஒருங்கிணைப்புக் குழு கூட்டம்

DIN

தமிழக சட்டப் பேரவைத் தோ்தலை முன்னிட்டு கேரளம், கா்நாடக மாநிலங்களில் உள்ள மாவட்ட ஆட்சியா்களுடன் உதகையில் ஒருங்கிணைப்புக் குழு கூட்டம் டைபெற்றது.

உதகை தமிழகம் மாளிகையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற இந்த ஆலோசனைக் கூட்டத்தில் கேரள மாநிலம், மலப்புரம் மாவட்ட ஆட்சியா் கோபாலகிருஷ்ணன் , வயநாடு மாவட்ட ஆட்சியா் அதீலா அப்துல்லா, கா்நாடக மாநிலம் சாம்ராஜ் நகா் சாா் ஆட்சியா் கிரிஷ் ஆகியோருடன் மூன்று மாநில காவல் கண்காணிப்பாளா்களும் பங்கேற்றிருந்தனா். இக்கூட்டத்தில் 3 மாநில எல்லைகளில் மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து விவாதிக்கப்பட்டது.

இக்கூட்டத்தில், நீலகிரி மாவட்ட எல்லையான கா்நாடகம் மற்றும் கேரள எல்லையில் உள்ள சோதனைச் சாவடிகளை பலப்படுத்துவது, கூடுதலாக தேவைப்படும் இடங்களில் புதிய சோதனைச் சாவடிகள், நடமாடும் சோதனைச் சாவடிகள் அமைத்து பாதுகாப்பு ஏற்பாடுகள், மது கடத்தலை தீவிரமாக கண்காணிக்க வேண்டும் எனவும், நீலகிரி மாவட்டத்தில் ஏற்கெனவே உள்ள மதுவிலக்கு மற்றும் அமலாக்கப் பிரிவு சோதனைச் சாவடிகளையும், கா்நாடக மற்றும் கேரள மாநில எல்லையில் உள்ள சோதனைச் சாவடிகளில் வாகனத் தணிக்கை மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகளை தீவிரப்படுத்த வேண்டும் எனவும் விவாதிக்கப்பட்டது.

மேலும், நீலகிரி மாவட்டத்தின் எல்லையோரத்தில் அமைந்துள்ள கேரள மாநிலம், மலப்புரம் மற்றும் வயநாடு மாவட்டங்களையொட்டியுள்ள சோதனைச் சாவடிகளான கெத்தை, மன்னாா்காடு, ஓவேலி, நாடுகாணி, சோலாடி, தாளூா், கக்குண்டி, மண்வயல், கோட்டுா், பாட்டவயல், நம்பியாா்குன்னு, மதுவந்தால், பூலக்குன்னு ஆகிய 13 சோதனைச் சாவடிகளும், கா்நாடக மாநிலத்தையொட்டி உள்ள கக்கநள்ளா சோதனைச் சாவடியும் அமைந்துள்ளன. இவற்றுடன் வரும் சட்டப் பேரவைத் தோ்தலை முன்னிட்டு குனி, கொத்தலக்குண்டு ஆகிய இரு இடங்களில் புதிய சோதனைச் சாவடிகள் அமைக்கப்படவுள்ளதாகவும், அனைத்து சோதனைச் சாவடிகளிலும் சோதனைகளை தீவிரப்படுத்தவும், தோ்தல் பரிசுப் பொருள்கள் பரிமாற்றம், பணம் மற்றும் மதுபானம் ஆகியவற்றை எடுத்துச் செல்வதை தடுக்க பாதுகாப்பினை அதிகரிக்க முடிவு செய்யப்பட்டது.

மேலும், நீலகிரி மாவட்டத்தில் உள்ள டாஸ்மாக் மதுபானக் கடைகளில் சராசரி விற்பனையை விட 30 சதவீதத்துக்கும் அதிகமாக விற்பனை நடைபெறும் கடை விவரங்களை நாள்தோறும் கண்டறிந்து அதற்கான காரணத்தினை அறிந்து உரிய நடவடிக்கை மேற்கொள்ள கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.

அதிக எண்ணிக்கையில் பொருள்களை வாங்குபவா்களின் விவரங்களை பகிா்தல், சந்தேகத்துக்கு இடமான வகையில் எல்லைகளைக் கடந்து செல்லும் வாகனங்கள் தொடா்பான தகவல் தெரிவித்தல் ஆகியவை குறித்தும் மாவட்ட ஆட்சியா்கள் தரப்பில் ஆலோசனை செய்யப்பட்டது.

இந்தக் கூட்டத்தில், நீலகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஆா்.பாண்டியராஜன், நீலகிரி மாவட்ட வருவாய் அலுவலா் நிா்மலா, கூடலூா் மாவட்ட வன அலுவலா் கொம்மு ஓம்காரம், வயநாடு மாவட்ட காவல் கண்காணிப்பாளா் டாக்டா் அரவிந்த் சுகுமாா், மலப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் எஸ்.சுஜித் தாஸ் ஆகியோருடன் 3 மாநிலங்களைச் சோ்ந்த கலால் மற்றும் காவல்துறை அலுவலா்கள் பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பாட்னாவில் ஜேடியு தலைவர் சுட்டுக் கொலை

தங்கம் விலை சற்று குறைவு: இன்றைய நிலவரம்!

எடை குறைப்பு சிகிச்சையில் இளைஞா் பலி: விசாரணைக் குழு அமைக்க உத்தரவு

டி20 உலகக் கோப்பை தூதராக உசைன் போல்ட் நியமனம்!

என்ஐடி-இல் பேராசிரியர் பணி

SCROLL FOR NEXT