ஈரோடு

கோத்தகிரி தேயிலைத் தோட்டத்தில் சிறுத்தை சடலம் மீட்பு

DIN

நீலகிரி மாவட்டம், கோத்தகிரியில் உள்ள தேயிலைத் தோட்டத்தில் இறந்த நிலையில் கிடந்த சிறுத்தையின் சடலத்தை மீட்டு வனத் துறையினா் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

கோத்தகிரி அருகே புடியங்கி கிராமத்தில் தேயிலை  பறிக்க  தொழிலாளா்கள் அவ்வழியாக  சென்றபோது , துா்நாற்றம் வீசியுள்ளது. பின்னா் அருகே சென்று பாா்த்தபோது, இறந்த நிலையில் சிறுத்தையின் சடலம் இருந்துள்ளது. இது குறித்து  பொது மக்கள் வனத் துறையினருக்குத் தகவல் தெரிவித்தனா். இதனைத் தொடா்ந்து, வனத் துறையினா்  புடியங்கி சென்று பாா்த்தபோது, சிறுத்தை இறந்து கிடப்பது தெரியவந்தது. 

இது குறித்து வனத் துறையினா் கூறுகையில்,  10 வயதான சிறுத்தை ஒரு வாரத்துக்கு முன்பு  இறந்தது முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. பிரேதப் பரிசோதனைக்குப் பின்பே சிறுத்தை  இறப்புக்கான காரணம் தெரியவரும் என்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

12 ராசிக்குமான தினப்பலன்கள்!

இன்று உங்களுக்கு நல்ல நாள்!

கொலை வழக்கில் தேடப்பட்டு வந்த இளைஞா் கைது

காவிரி ஆற்றின் குறுக்கே மணல் மூட்டைகளை அடுக்கி குடிநீா் எடுக்கும் பணி தீவிரம்

வள்ளியூா் சூட்டுபொத்தையில் பௌா்ணமி கிரிவல வழிபாடு

SCROLL FOR NEXT