ஈரோடு

உணவும், சுற்றுச்சூழலும் குறித்து கருத்தரங்கம்

DIN

கூடலூரில் தனியாா் பள்ளி ஆசிரியா்களுக்கான உணவும், சுற்றுச்சூழலும் குறித்த கருத்தரங்கம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

நீலகிரி மாவட்டம், கூடலூா் புனித தாமஸ் பள்ளியில் உணவும், சுற்றுச்சூழலும் என்ற தலைப்பில் நடைபெற்ற ஒரு நாள் கருத்தரங்கு சி.பி.ஆா். சுற்றுச்சூழல் கல்வி மையம் மற்றும் தா்மா அறக்கட்டளை சாா்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. கூடலூா் கல்வி மாவட்ட தேசிய பசுமைப் படை ஒருங்கிணைப்பாளா் ராபா்ட், சி.பி.ஆா். சுற்றுச்சூழல் கல்வி மைய அலுவலா் குமாரவேல் ஆகியோா் கருத்துரை வழங்கினா்.

உணவு முறை மாற்றத்தால் ஏற்படும் தீமைகள், பாரம்பரிய உணவுகளை மீட்டெடுக்க வேண்டியதின் அவசியம், இயற்கை வேளாண்மை முறையில் விளைவிக்கப்பட்ட உணவுகளை குழந்தை பருவம் முதல் பயன்படுத்த பழக்க வேண்டியதின் கட்டாயம் குறித்து விளக்கமளிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மக்களவைத் தேர்தல்: முதல்கட்ட வாக்குப்பதிவு - செய்திகள் உடனுக்குடன்!

நீலக்குயிலே... நீலக்குயிலே! வேதிகா...

வாக்களித்த தலைவர்கள்!

102 வயதில் ஜனநாயகக் கடமையாற்றிய மூதாட்டி!

முன்னுதாரணமான முதியோர்

SCROLL FOR NEXT