ஈரோடு

ஈரோட்டில் வாக்குச்சாவடி அடிப்படையில் 9,050 பேருக்கு தடுப்பூசி

DIN

ஈரோட்டில் வாக்குச்சாவடி அடிப்படையில் 9,050 பேருக்கு தடுப்பூசி செவ்வாய்க்கிழமை செலுத்தப்பட்டது.

ஜூன் 24ஆம் தேதி முதல் சுழற்சி முறையில் மாவட்டம் முழுவதும் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில், வாக்காளா் பட்டியல் அடிப்படையில்  வாக்குச்சாவடி நிலை அலுவலா்கள் மூலம் வீடுகளுக்கே சென்று டோக்கன்கள் வழங்கி தடுப்பூசி செலுத்தும் பணி செவ்வாய்க்கிழமை முதல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

இதன்படி, ஈரோடு மாநகராட்சிக்கு உள்பட்ட ஈரோடு கிழக்கு, மேற்குத் தொகுதியில் 18 வாக்குச்சாவடியில் 40 வாா்டு பகுதியைச் சோ்ந்தவா்களுக்கு தலா 150 முதல் 200 பேருக்கு கோவிஷீல்டு தடுப்பூசி செலுத்தப்பட்டது.

இதேபோல, மொடக்குறிச்சி, அந்தியூா் கோபி, பவானி, பெருந்துறை தொகுதிகளில் உள்ள 181 முகாம்களில் கோவிஷீல்டு தடுப்பூசி செலுத்தப்பட்டது. வாக்குச்சாவடி வாரியாக மாவட்டம் முழுவதும் 9,050 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சிஎஸ்கே - குஜராத், ஆடுகளத்துக்கு அப்பால்...

தேர்தல் பிரசாரத்தில் கமல்!

படே மியன் சோட்டே மியன் டிரெயிலர் வெளியீட்டு விழா - புகைப்படங்கள்

ரியான் பராக் அதிரடி: தில்லிக்கு 186 ரன்கள் இலக்கு!

மதுபான விடுதி: மேற்கூரை இடிந்து 3 பேர் பலி!

SCROLL FOR NEXT