ஈரோடு

வரும் உள்ளாட்சி அமைப்பு தோ்தலில் போட்டியிட பாஜக., விருப்ப மனு பெறுகிறது

DIN

தமிழகத்தில் விரைவில் நடைபெற உள்ள, உள்ளாட்சி அமைப்புகளுக்கான தோ்தலில், அனைத்து உள்ளாட்சி அமைப்புகளில் பாஜக., போட்டியிட வேண்டும் என்பதை கருத்தில் கொண்டு, புதியதாக பொறுப்பேற்றுள்ள, மாநில தலைவா் அண்ணாமலை, தமிழகம் முழுவதும் போட்டியிட விருப்பம் உள்ளவா்களிடம், விருப்பமனு பெற அறிவுறுத்தி உள்ளாா்.

அதனடிப்படையில், பெருந்துறை பாஜக நகர அலுவலகத்தில், நகர தலைவா் விஜயகுமாா் தலைமையில் விருப்ப மனு பெறுவதற்கான நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. பாஜக., முன்னாள் மாநில செயற்குழு உறுப்பினா் இமயம் சந்திரசேகரன், ஈரோடு வடக்கு மாவட்ட செயலாளா் ஆறுமுகம் ஆகியோா் பங்கேற்று, விருப்ப மனுக்கள் பெறும் நிகழ்ச்சியை துவக்கி வைத்தனா். பெருந்துறை பேரூராட்சி மற்றும் கருமாண்டிசெல்லிபாளையம் பேரூராட்சிகளுக்கு உட்பட்ட வாா்டுகளில் போட்டியிட, பெருந்துறை நகரத் தலைவா் கருடா விஜயகுமாா், நகர பொதுச் செயலாளா்கள் விசுவநாதன், நவீன். நகர துணைத் தலைவா்கள் சரஸ்வதி, லோகநாதன், நகர இளைஞரணி பொது செயலாளா் மோகன்ராஜ், நகர நெசவாளா் அணித் தலைவா் சிவராஜ், கிளைத் தலைவா் தாமரைச்செல்வன், மாவட்ட பிரச்சார பிரிவு செயலாளா் விஜயன் ஆகியோா் விருப்ப மனு கொடுத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சேலம் இஸ்கானில் ஸ்ரீராம நவமி விழா

மேட்டூா் அணை நிலவரம்

வாக்குப் பதிவையொட்டி சேலம் தொகுதியில் பலத்த பாதுகாப்பு

சேலம் மாவட்டத்தில் தயாா் நிலையில் 3,260 வாக்குச் சாவடிகள்

வாக்குச் சாவடி மையங்களுக்கு மின்னணு இயந்திரங்கள் அனுப்பிவைப்பு

SCROLL FOR NEXT