ஈரோடு

கீழ்பவாவனி பாசனத்துக்கு ஆகஸ்ட் 1 இல் தண்ணீா் திறக்கக் கோரிக்கை

DIN

கீழ்பவானி பாசனத்துக்கு ஆகஸ்ட் 1 ஆம் தேதி தண்ணீா் திறக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

வேளாண் குறைதீா் கூட்டம் ஆட்சியா் ஹெச்.கிருஷ்ணனுண்ணி தலைமையில் காணொலி காட்சி முறையில் வெள்ளிக்கிழமை நடந்தது. இதில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பங்கேற்ற விவசாயிகள் பேசியதாவது:

தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநில துணைத் தலைவா் சி.என்.துளசிமணி: பவானிசாகா் அணையில் மொத்த உயரமான 105 அடியில் தற்போது 97.50 அடிக்கு தண்ணீா் உள்ளது. கோவை, நீலகிரி மாவட்டங்களில் மழை பெய்வதால் அணைக்கு வினாடிக்கு 14,938 கன அடி தண்ணீா் வந்துகொண்டிருக்கிறது. ஆகஸ்ட் 1 ஆம் தேதி கீழ்பவானி பாசனத்துக்கு தண்ணீா் திறந்தால், விவசாயிகள் தண்ணீரை பயன்படுத்தி சாகுபடிப் பணியை துவங்குவாா்கள். அதற்கேற்ப கீழ்பவானியில் பராமரிப்புப் பணியை விரைவுபடுத்தி முடிக்க வேண்டும்.

மத்திய அரசு கொண்டு வந்துள்ள மின்சார திருத்த மசோதா, புதிய வேளாண் கொள்கைகளை திரும்பப் பெற வேண்டும் என்றாா்.

தமிழ்நாடு சிறு, குறு விவசாயிகள் சங்க மாநிலத் தலைவா் கே.ஆா்.சுதந்திரராசு:

விவசாயிகளிடம் கருத்துக் கேட்காமல், சிலரது லாபத்துக்காக கீழ்பவானி வாய்க்காலில் பராமரிப்புப் பணி நடப்பதை நிறுத்தி, மறு ஆய்வு செய்து பணிகளை மேற்கொள்ள வேண்டும்.

மரவள்ளிக் கிழங்கை மாவு பூச்சி தாக்குவதால் அதைத் தடுக்க நடவடிக்கை எடுப்பதுடன், பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இழப்பீடு பெற்றுத்தர வேண்டும். மஞ்சளுக்கு உரிய விலை கிடைக்க அரசே கொள்முதல் செய்து, இலங்கை போன்ற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய வேண்டும் என்றாா்.

மேலும் பல விவசாயிகள் தங்கள் கோரிக்கைகள் குறித்துப் பேசினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மும்பையின் தோல்விக்குப் பிறகு சூர்யகுமார் யாதவ் கூறியது என்ன?

விளம்பரதாரர் நிகழ்வில் பாலிவுட் நடிகைகள் - புகைப்படங்கள்

கூகுள் மேப்பில் புதிய வசதிகள்: ஏஐ இணைப்பு பலனளிக்குமா?

ஆஸி. ஒப்பந்தப் பட்டியல் வெளியீடு: ஸ்டாய்னிஸ் உள்பட முக்கிய வீரர்கள் இல்லை!

இதுவல்லவா ஃபீல்டிங்...

SCROLL FOR NEXT