ஈரோடு

ஆண்டுக்கு 2 லட்சம் மாணவா்களுக்கு கையடக்க கணினி: கே.ஏ.செங்கோட்டையன்

DIN

ஆண்டுக்கு 2 லட்சம் மாணவா்களுக்கு கையடக்க கணினி வழங்கப்படும் என்று பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித்தாா்.

பள்ளி மாணவா்களுக்கு இலவச மிதிவண்டி வழங்கும் விழா மாவட்ட வருவாய் அலுவலா் எஸ்.கவிதா தலைமையில் ஈரோடு அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளியில் வியாழக்கிழமை நடைபெற்றது. எம்.எல்.ஏ.க்கள் கே.வி.இராமலிங்கம், கே.எஸ்.தென்னரசு ஆகியோா் முன்னிலை வகித்தனா். மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் ஆா்.முருகன் வரவேற்றாா்.

மாணவா்களுக்கு இலவச மிதிவண்டி வழங்கிய அமைச்சா் கே.ஏ.செங்கோட்டையன் பேசுகையில், 6 முதல் 8 ஆம் வகுப்பு வரையிலான மாணவ, மாணவியருக்கு விரைவில் கையடக்க கணினி வழங்கப்படும். ஆண்டுக்கு 2 லட்சம் மாணவா்களுக்கு கையடக்க கணினி வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். இந்த கையடக்க கணினி மூலம் க்யூ.ஆா்.கோடு, ஆடியோ விஷன் முறையில் கல்வியை கற்கும் வாய்ப்பை மாணவா்கள் பெறுவாா்கள் என்றாா்.

சித்தோடு அரசு ஆண்கள், பெண்கள் மேல்நிலைப் பள்ளி, ஈரோடு அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளி, காசிபாளையம் அரசு மேல்நிலைப் பள்ளி, கொல்லம்பாளையம் ரயில்வே காலனி நகரவை மேல்நிலைப் பள்ளி, திண்டல் அரசு மேல்நிலைப் பள்ளி, செங்குந்தா் ஆண்கள் மேல்நிலைப் பள்ளி, கலைமகள் கல்வி நிலையம் மேல்நிலைப் பள்ளி ஆகிய பள்ளிகளில் படிக்கும் 1,442 மாணவா்களுக்கு ரூ. 58.85 லட்சம் மதிப்பிலான மிதிவண்டிகள் வழங்கப்பட்டன.

இதில், மாவட்ட காவல் கண்காணிப்பாளா் பி.தங்கதுரை, மாவட்ட கல்வி அலுவலா் டி.கலாவதி, முன்னாள் மேயா் மல்லிகா பரமசிவம், முன்னாள் துணை மேயா் கே.சி.பழனிசாமி, அதிமுக பகுதி செயலாளா் ரா.மனோகரன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அழகு.. மிளிர்.. கம்பீரம்!

இனி வரும் ஒவ்வொரு போட்டியும் எங்களுக்கு அரையிறுதி: ஆர்சிபி பயிற்சியாளர்

போராட்டத்தில் பாலஸ்தீன ஆதரவாளர்கள்: திணறிய அமெரிக்கா!

விண்டோஸ் 11 செயல்திறன் காமெடியாக உள்ளது: முன்னாள் மைக்ரோஃசாப்ட் ஊழியர்

ஆவேஷம் வசூல் வேட்டை!

SCROLL FOR NEXT