ஈரோடு

காரைவாய்க்கால், சின்ன மாரியம்மன் கோவில்களில் நாளை கும்பாபிஷேகம்

17th Jan 2021 07:02 PM

ADVERTISEMENT


ஈரோடு: காரைவாய்க்கால் மாரியம்மன் மற்றும் சின்ன மாரியம்மன் கோவில்களில் நாளை (திங்கள்கிழமை) கும்பாபிஷேகம் நடைபெறுகிறது.

ஈரோடு பெரியமாரியம்மன் வகையறாவைச் சேர்ந்த காரைவாய்க்கால் மாரியம்மன் கோவில், 50 லட்சம் ரூபாய் செலவில் புதிதாகக் கட்டி முடிக்கப்பட்டது.

பாரியூர் காளியம்மன் கோவிலைப் போல, காளிங்கராயன் வாய்க்காலில் நீராடி பின் குண்டம் இறங்கும் வகையில் கோவில் நிலை மாற்றப்பட்டுள்ளது. குண்டம் இறங்கும் பக்தர்களைக் காணும் வகையில் மூலவர் கருவறை அமைக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

இதே போல் பொன்வீதியில் உள்ள சின்ன மாரியம்மன் கோவிலிலும் புனரமைப்புப் பணிகள் நிறைவடைந்துள்ளன.

இதை முன்னிட்டு மாவட்ட நிர்வாகத்தின் அனுமதியுடன் நாளை காலை 10:00 மணிக்கு காரைவாய்க்கால் மாரியம்மன் கோவிலிலும், 10:35 மணிக்கு மேல் சின்னமாரியம்மன் கோவிலிலும் கும்பாபிஷேகம் நடக்கிறது.

கும்பாபிஷேக விழா கணபதி ஹோமத்துடன் நேற்று தொடங்கியது.

இன்று இரண்டாம் காலம், மூன்றாம் யாக பூஜைகள் நடந்தன. தொடர்ந்து கலசம் நிறுவுதல், அஷ்ட பந்தனம் சாற்றுதல் ஆகிய நிகழ்ச்சிகளும் நடைபெற்றன. 

கும்பாபிஷேக விழாவில் கலந்து கொள்ளும் பக்தர்கள் கரோனா தடுப்பு விதிமுறைகளைக் கடைப்பிடிக்க வேண்டும் என கோவில் நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.

Tags : Erode
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT