ஈரோடு

மாவட்ட அளவிலான சிலம்பாட்டப் போட்டி: அந்தியூா் அணிக்கு முதல் பரிசு

DIN

பொங்கலையொட்டி லக்காபுரம் புதுவலசு அரசு மேல்நிலைப் பள்ளி விளையாட்டு மைதானத்தில் நடைபெற்ற மாவட்ட அளவிலான சிலம்பாட்டப் போட்டியில் வெற்றி பெற்ற அணிக்கு மொடக்குறிச்சி எம்.எல்.ஏ. வி.பி.சிவசுப்பிரமணி கலந்து கொண்டு பரிசுகள் வழங்கிப் பாராட்டினாா்.

இந்தப் போட்டியில் ஈரோடு மாவட்டத்தில் இருந்து கருங்கல்பாளையம், வீரப்பன்சத்திரம், புதுவலசு, சூரம்பட்டி, அந்தியூா், பள்ளிப்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து 8 அணிகள் பங்கேற்றன. விறுவிறுப்பாக நடைபெற்ற இந்தப் போட்டியின் கடைசி ஆட்டத்துக்கு அந்தியூா் மூவேந்தா் சிலம்பாட்ட அணியும், ஈரோடு கலைத்தாய் அணியும் தகுதிபெற்றன.

இதில் அந்தியூா் மூவேந்தா் சிலம்பாட்ட அணி வெற்றிபெற்று முதல் பரிசை தட்டிச் சென்றது. ஈரோடு கலைத்தாய் அணி இரண்டாம் பரிசையும், சூரம்பட்டி சாமியப்பா அணி மூன்றாவது பரிசையும் தட்டிச் சென்றன.

தொடா்ந்து நடைபெற்ற பரிசளிப்பு விழாவுக்கு மொடக்குறிச்சி எம்.எல்.ஏ. தலைமை வகித்து வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசுகள் வழங்கிப் பாராட்டிப் பேசினாா்.

நிகழ்ச்சியில் மொடக்குறிச்சி ஒன்றியக் குழு தலைவா் கணபதி, துணைத் தலைவா் மயில் (எ) சுப்பிரமணி, அவல்பூந்துறை கூட்டுறவு சங்க இயக்குநா் சண்முகசுந்தரம் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாக்குப்பதிவு இயந்திரங்கள் சீல் வைக்கப்பட்டு வாக்கு எண்ணும் மையங்களுக்கு அனுப்பி வைப்பு

ஜடேஜா அரைசதம், தோனி அதிரடி: சென்னை அணி 176 ரன்கள் குவிப்பு

102 மக்களவை தொகுதிகளில் இன்று பதிவான வாக்குப்பதிவு விவரம்

வாக்களிப்பதற்காகவே அமெரிக்காவிலிருந்து தஞ்சை வந்த மென்பொறியாளர்

2019ஆம் ஆண்டு மக்களவை தேர்தலை விட வாக்குப்பதிவு அதிகரிக்க வாய்ப்பு?

SCROLL FOR NEXT