ஈரோடு

எம்.ஜி.ஆர். சிலைக்கு அதிமுகவினர் மாலை அணிவித்து மரியாதை

17th Jan 2021 07:13 PM

ADVERTISEMENT


ஈரோடு: மறைந்த முதல்வர் எம்.ஜி.ஆரின் பிறந்த நாளையொட்டி இன்று (ஞாயிற்றுக்கிழமை) அவரது சிலைக்கும், படத்துக்கும் அதிமுகவினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

அதன்படி ஈரோடு மாநகர மாவட்ட அதிமுக சார்பில் கட்சி அலுவலகத்தில் உள்ள எம்.ஜி.ஆர். சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. 

ஈரோடு மாநகர் மாவட்டச் செயலாளரும், எம்.எல்.ஏ.வுமான கே.வி. ராமலிங்கம், நிகழ்ச்சிக்கு தலைமை தாங்கி எம்.ஜி.ஆர். சிலைக்கு மாலை அணிவித்தார். அதைத் தொடர்ந்து ஜெயலலிதா சிலைக்கும் மாலை அணிவித்தார். கே.எஸ். தென்னரசு, எம்.எல்.ஏ நிகழ்ச்சிக்கு முன்னிலை வகித்தார்.

இதைத் தொடர்ந்து பன்னீர்செல்வம் பார்க்கில் உள்ள எம்.ஜி.ஆர். சிலைக்கு எம்.எல்.ஏ.க்கள் கே.வி. ராமலிங்கம், கே.எஸ் .தென்னரசு ஆகியோர் மாலை அணிவித்தனர். 

ADVERTISEMENT

அதைத் தொடர்ந்து ஜெயலலிதா, அண்ணா சிலைக்கும் மாலை அணிவிக்கப்பட்டது. அவைத் தலைவர் ராமசாமி, முன்னாள் எம்.எல்.ஏ. பூந்துறை பாலு, முன்னாள் மேயர் மல்லிகா பரமசிவம், துணை மேயர் கே. சி. பழனிச்சாமி, பகுதி செயலாளர் பெரியார் நகர் மனோகரன், கேசவமூர்த்தி, சூரம்பட்டி ஜெகதீசன், ஜெயராஜ், கோவிந்தன், தங்கமுத்து, ராமசாமி, ஒன்றியச் செயலாளர் பூவேந்திர குமார், ஆவின் துணைத் தலைவர் குணசேகரன், ஜெயலலிதா பேரவை மாவட்ட இணைச் செயலாளர் வீரக்குமார், மாணவரணி மாவட்டச் செயலாளர் ரத்தன் பிரித்வி, மாணவர் அணி இணைச் செயலாளர் யூனிவர்சல் நந்தகோபால், பெரியார் நகர் தொகுதி அவைத் தலைவர் மீன் ராஜா உள்பட பலர் கலந்து கொண்டனர். 

இதைத் தொடர்ந்து எம்.எல்.ஏ.க்கள் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினர்.

Tags : MGR
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT