ஈரோடு மாவட்ட வேளாண் குறைதீா் கூட்டம் ஆட்சியா் அலுவலக இரண்டாம் தளத்தில் உள்ள கூட்ட அரங்கில் வெள்ளிக்கிழமை (டிசம்பா் 31) காலை 10.30 மணிக்கு நடைபெறவுள்ளது.
இதுகுறித்து, மாவட்ட ஆட்சியா் ஹெச்.கிருஷ்ணனுண்ணி வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
காலை 10.30 மணி முதல் 11.30 மணி வரை விவசாயிகளிடம் மனுக்கள் பெறப்படும். 11.30 மணி முதல் 12.30 மணி வரை விவசாயிகள், விவசாய சங்கப் பிரதிநிதிகளிடம் குறைகள் கேட்கப்படும். பகல் 12.30 மணி முதல் 1.30 மணி வரை அதிகாரிகள் விளக்கம் அளிக்க உள்ளனா். இதில் விவசாயிகள், விவசாய சங்கப் பிரதிநிதிகள் பங்கேற்று குறைகள், கோரிக்கைகளைத் தெரிவிக்கலாம்.