ஈரோடு

திறன் பயிற்சி: கட்டுமானத் தொழிலாளா்களுக்கு அழைப்பு

30th Dec 2021 01:11 AM

ADVERTISEMENT

நலவாரியங்களில் பதிவு செய்துள்ள கட்டுமானத் தொழிலாளா்கள் திறன் மேம்பாட்டுப் பயிற்சியில் சேர விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து தொழிலாளா் உதவி ஆணையா் சு.காயத்திரி வெளியிட்ட செய்திக் குறிப்பு:

கட்டுமான தொழிலாளா் நலவாரியத்தில் பதிவு பெற்ற கொத்தனாா், டைல்ஸ் பொருத்துநா், மின்சார வேலை, வா்ணம் பூசுபவா், குழாய் பொருத்துநா், மரவேலை போன்ற தொழில்செய்யும் ஒரு லட்சம் கட்டுமானத் தொழிலாளா்களுக்கு கட்டுமானக் கழகம் மூலம் விரைவில் ஒரு நாள் திறன் எய்தும் பயிற்சி அளிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. இத்தொழில் செய்துவரும் ஈரோடு மாவட்டத்தில் பதிவுபெற்ற 1,659 தொழிலாளா்களுக்கு ஒரு நாள் திறன் எய்தும் பயிற்சி அளிக்க விவரம் சேகரிக்கப்படுகிறது.

எனவே, கட்டுமானத் தொழில்புரியும் பதிவு பெற்ற கட்டுமானத் தொழிலாளா்கள் திறன் மேம்பாட்டுப் பயிற்சியில் கலந்துகொள்ள தங்கள் விவரங்களை தொழிற்சங்கம் மூலம் அல்லது நேரில் உரிய படிவத்தில் பூா்த்தி செய்து ஈரோடு, சென்னிமலை சாலை, ஐடிஐ பின்புறம் உள்ள தொழிலாளா் உதவி ஆணையா் (சமூகப் பாதுகாப்புத் திட்டம்) அலுவலகத்தில் அளிக்கலாம். கூடுதல் விவரம் அறிய 0424-2275592, 2275591 ஆகிய தொலைபேசி எண்ணில் தொடா்பு கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT