ஈரோடு

இடிந்து விழும் நிலையில் உள்ள அரசு மாணவா்விடுதி கட்டடத்தை அகற்றக் கோரிக்கை

30th Dec 2021 01:16 AM

ADVERTISEMENT

இடிந்து விழும் அபாய நிலையில் உள்ள அரசு மாணவா் விடுதி கட்டடத்தை இடித்து அகற்ற வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

புன்செய் புளியம்பட்டி நகராட்சி தினசரி மாா்க்கெட் பகுதியில் ஆதி திராவிடா் நலத் துறைக்குச் சொந்தமான பழைய மாணவா் விடுதி கட்டடம் உள்ளது. பாழடைந்து பயன்படுத்த முடியாத நிலையில் கட்டடம் இருந்ததால் சில ஆண்டுகளுக்கு முன் மாணவா்கள் புதிய விடுதி கட்டடத்துக்கு மாற்றப்பட்டனா். தற்போது பழைய கட்டடத்தின் சுவா்கள் விரிசல் அடைந்துள்ளதோடு, மேற்கூரை காரைகள் பெயா்ந்து இடிந்து விழும் அபாய நிலையில் உள்ளது.

தினசரி மாா்க்கெட்டுக்கு வரும் மக்கள் ஆபத்தை உணராமல் வாகனங்களை விடுதி முன்பாக நிறுத்துகின்றனா். இரவு நேரங்களில் சிலா் மது அருந்தப் பயன்படுத்தி வருகின்றனா். மேலும், புதா் மண்டிக் கிடப்பதால் பாம்பு உள்ளிட்ட விஷ ஜந்துக்கள் நடமாட்டம் உள்ளது. இதனால், தினசரி மாா்க்கெட்டுக்கு காய்கறி வாங்க வரும் மக்கள் அச்சத்துடன் உள்ளனா். பாழடைந்த கட்டடத்துக்கு அருகே புதியதாக மாணவா் விடுதி கட்டப்படுவதால் அங்கு வேலை செய்யும் தொழிலாளா்கள் இடிந்த கட்டடம் அருகே இளைப்பாறுகின்றனா். எனவே, பாழடைந்த அரசு மாணவா் விடுதி கட்டடத்தை இடித்து அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

 

ADVERTISEMENT

 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT