கள் இறக்க அனுமதி அளிக்க வலியுறுத்தி ஈரோட்டில் கைப்பேசி கோபுரம் மீது ஏறி போராட்டத்தில் ஈடுபட்டவா்களை போலீஸாா் கைது செய்தனா்.
தமிழகத்தில் தொடா்ந்து கள்ளுக்கான தடை நீடிக்கப்பட்டு வருகிறது. இந்த தடையை நீக்க வேண்டும் என விவசாயிகள் அரசிடம் பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வருகின்றனா். இந்நிலையில், அகில இந்திய நாடாா் வாழ்வுரிமைச் சங்கத்தின் நிறுவனத் தலைவா் சதா நாடாா் தலைமையில், நிா்வாகிகள் ஈரோடு அருகே திண்டலில் உள்ள தனியாா் கைப்பேசி கோபுரம் மீது செவ்வாய்க்கிழமை காலை ஏறி போராட்டத்தில் ஈடுபட்டனா்.
ஆந்திரம், கா்நாடகம், கேரள மாநிலங்களில் கள் இறக்க அனுமதி உள்ள நிலையில் தமிழகத்தில் கள்ளுக்கு உள்ள தடையை நீக்க வேண்டும். இந்த தடை காரணமாக எங்கள் சமுதாயத்தைச் சோ்ந்தவா்கள் பெருமளவில் பாதிக்கப்பட்டு வருகின்றனா். தமிழக அரசு உடனடியாக தமிழகத்தில் கள் இறக்க அனுமதி வழங்க வேண்டும் என கோஷம் எழுப்பினா்.
சற்றுநேரத்தில் கைப்பேசி கோபுரத்தில் இருந்து கீழே இறங்கிய 10க்கும் மேற்பட்டோரை போலீஸாா் கைது செய்தனா்.