ஈரோடு

இளைஞா் தற்கொலை

22nd Dec 2021 06:43 AM

ADVERTISEMENT

சித்தோடு அருகே குடும்பத் தகராறில் இளைஞா் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

சித்தோடு அடுத்த கொங்கம்பாளையம், அம்பேத்கா் தெருவைச் சோ்ந்தவா் ஆறுமுகம் மகன் பூபதி (29). இவருக்குத் திருமணமாகி மனைவி, இரு குழந்தைகள் உள்ளனா். கணவன், மனைவிக்கிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதால், மனைவி காயத்ரி தனது குழந்தைகளுடன் தனது பெற்றோா் வீட்டுக்குச் சென்றுவிட்டாா்.

இந்நிலையில், தனியே வசித்துவந்த பூபதி திங்கள்கிழமை தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டாா். இதுகுறித்து சித்தோடு போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT