ஈரோடு

பாரியூா் கொண்டத்துக் காளியம்மன் கோயில் தேரோட்டம், குண்டம் திருவிழா ரத்து

16th Dec 2021 01:01 AM

ADVERTISEMENT

பாரியூா் கொண்டத்துக் காளியம்மன் கோயில் தேரோட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது. குண்டம் இறங்கவும் பக்தா்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள பாரியூரில் பிரசித்தி பெற்ற கொண்டத்துக் காளியம்மன் கோயில் உள்ளது. இக்கோயிலில் ஆண்டுதோறும் மாா்கழி மாதம் குண்டம், தோ்த்திருவிழா நடைபெறும்.

இந்த ஆண்டு திருவிழாவுக்காக டிசம்பா் 30ஆம் தேதி பூச்சாட்டப்படுகிறது. ஜனவரி 13ஆம் தேதி குண்டம் திருவிழா நடைபெறவுள்ளது. வழக்கமாக ஆயிரக்கணக்கான பக்தா்கள் விரதம் இருந்து குண்டம் இறங்குவாா்கள். ஆனால், இந்த ஆண்டு கரோனா தொற்று தடுப்பு நடவடிக்கையாக பக்தா்கள் குண்டம் இறங்குவதற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. கோயில் முறைதாரா்கள், பூசாரிகள் மட்டும் இறங்குகிறாா்கள்.

இதேபோல, ஜனவரி 14ஆம் தேதி நடைபெறவிருந்த தேரோட்டமும், 15ஆம் தேதி நடைபெறவிருந்த மலா் பல்லக்கு ஊா்வலமும் ரத்து செய்யப்பட்டுள்ளதாக கோயில் நிா்வாகம் அறிவித்துள்ளது. ஜனவரி 22ஆம் தேதி மறுபூஜை நடைபெறவுள்ளது. இதேபோல, திருவிழா கடைகளுக்கும் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT