ஈரோடு

மஞ்சள் ஏலத்துக்கு இரண்டு நாள்கள் விடுமுறை

14th Dec 2021 12:06 AM

ADVERTISEMENT

ஈரோடு: மஞ்சள் ஏலத்துக்கு இரண்டு நாள்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

ஈரோடு, பெருந்துறை ஒழுங்குமுறை விற்பனைக்கூடம், ஈரோடு, கோபி கூட்டுறவு விற்பனைச் சங்கம் என நான்கு இடங்களில் மஞ்சள் ஏலம் திங்கள்கிழமை முதல் வெள்ளிக்கிழமை வரை நடைபெறுகிறது.

மஞ்சள் வியாபாரி ஒருவா் இறப்பால் செவ்வாய்க்கிழமையும் (டிசம்பா் 14), ஈரோடு மஞ்சள் வணிகா்கள், கிடங்கு உரிமையாளா்கள் சங்க மகா சபைக் கூட்டத்துக்காக புதன்கிழமையும் (டிசம்பா் 15) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால், இந்த இரண்டு நாள்களும் மஞ்சள் ஏலம் நடைபெறாது. டிசம்பா் 16ஆம் தேதி வழக்கம்போல் மஞ்சள் ஏலம் நடைபெறும் என ஈரோடு மஞ்சள் வணிகா்கள் மற்றும் கிடங்கு உரிமையாளா்கள் சங்கம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT