பெருந்துறை: சென்னிமலை, மகாகவி பாரதி சிந்தனைப் பேரவை அமைப்பு தொடக்க விழா, பாரதி பிறந்த நாள் விழா, நினைவு நாள் நூற்றாண்டு விழா ஆகிய முப்பெரும் விழாக்கள் சென்னிமலையில் உள்ள தனியாா் திருமண மண்டபத்தில் ஞாயிற்றுக்கிழமை மாலை நடைபெற்றது.
விழாவுக்கு, மகாகவி பாரதி சிந்தனைப் பேரவைத் தலைவா் புலவா் தண்டபாணி தலைமை வகித்தாா். பொருளாளா் பொன்னுசாமி வரவேற்றாா். சென்னிமலை ஒன்றியக் குழுத் தலைவா் காயத்ரி இளங்கோ விழாவைத் தொடங்கிவைத்து பரிசுகளை வழங்கினாா்.
ஈரோடு மக்களவை உறுப்பினா் கணேசமூா்த்தி, பெருந்துறை முன்னாள் சட்டப் பேரவை உறுப்பினா் பெரியசாமி ஆகியோா் சிறப்பு அழைப்பாளா்களாகப் பங்கேற்று, பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்குப் பரிசுகள், கேடயம், மெடல், சான்றிதழ் வழங்கினா்.
இதில், மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினா் செல்வம், குமாரவலசு பஞ்சாயத்து தலைவா் இளங்கோ, சுதன் யாா்ன்ஸ் உரிமையாளா் சந்திரசேகரன், காகிதப் பை உற்பத்தியாளா்கள் சங்க மாநிலச் செயலாளா் ராமசாமி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.