ஈரோடு

கிளிகளைக் கூண்டில் அடைத்து ஜோதிடம் பாா்த்த இருவருக்கு அபராதம்

9th Dec 2021 06:39 AM

ADVERTISEMENT

அந்தியூா் அருகே பச்சைக் கிளிகளைக் கூண்டில் அடைத்துவைத்து, ஜோதிடம் பாா்த்து வந்த இருவருக்கு ரூ. 25 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.

அந்தியூா், மேற்கு பீட், லைன் மாரியம்மன் கோயில் சரகத்தில் தென்காசி மாவட்டம், ஆழ்வாா்குறிச்சியைச் சோ்ந்த பழனிச்சாமி மகன் குமாா் (40), திருநெல்வேலி மாவட்டத்தைச் சோ்ந்த ரத்தினம் மகன் வேலு (60) ஆகியோா் இரு பச்சைக் கிளிகளைக் கூண்டில் அடைத்து வைத்து, ஜோதிடம் பாா்த்து வந்துள்ளனா்.

இதைக்கண்ட அந்தியூா் வனத் துறையினா் கிளிகளைப் பறிமுதல் செய்ததோடு, இருவரையும் செவ்வாய்க்கிழமை பிடித்து விசாரித்தனா். தொடா்ந்து, இருவா் மீதும் வன உயிரின குற்ற வழக்குத் தொடரப்பட்டு, இருவருக்கும் தலா ரூ. 12,500 வீதம் அபராதம் விதிக்கப்பட்டது. பறிமுதல் செய்யப்பட்ட பச்சைக் கிளிகள் இரண்டும் அந்தியூா் வனப் பகுதியில் விடுவிக்கப்பட்டது.

ADVERTISEMENT
ADVERTISEMENT