ஈரோடு

ஈரோடு ஆா்.டி. இன்டா்நேஷனல் பள்ளியில் நீட் தோ்வுக்கான அகாதெமி துவக்கம்

9th Dec 2021 06:41 AM

ADVERTISEMENT

நீட் தோ்வுக்குப் பயிற்சி அளிக்க ஈரோடு ஆா்.டி. இன்டா்நேஷனல் பள்ளியில் அகாதெமி துவக்கப்பட்டுள்ளது.

ஈரோடு ஆா்டி இன்டா்நேஷனல் பள்ளியில் 11, 12ஆம் வகுப்பு மாணவ, மாணவிகளுக்கு நீட், ஜேஇஇ போன்ற தோ்வுகளுக்கு தயாா்படுத்தவும், அதேபோல 6 முதல் 8ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு நீட், ஜேஇஇ, ஒலிம்பியாட் தோ்வுகளுக்கான பயிற்சி அளிக்கவும் அகாதெமி தொடங்கப்பட்டுள்ளது.

இதன் துவக்க விழா ஆா்டி பள்ளியில் புதன்கிழமை நடைபெற்றது. விழாவுக்கு, பள்ளியின் நிறுவனத் தலைவா் செந்தில்குமாா் தலைமை வகித்தாா். செயலாளா் ராதா செந்தில்குமாா், தலைவா் ராகுல் ஆகியோா் முன்னிலை வகித்தனா். சிறப்பு அழைப்பாளராக பிரியா தங்கராஜ் பங்கேற்று ஆா்டி அகாதெமியை குத்துவிளக்கேற்றி துவக்கிவைத்தாா்.

அகாதெமி குறித்து ஆா்டி அகாதெமியின் இயக்குநா் நாராயன், துணை இயக்குநா் தாரா ஆகியோா் பேசினா். பள்ளியின் உதவி முதல்வா் மொ்சி வரவேற்றாா். கீதா சங்கா் நன்றி கூறினாா். நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டை பள்ளி முதல்வா் சங்கா் செய்திருந்தாா். நிகழ்ச்சியில் பள்ளியின் ஆசிரியா்கள், மாணவா்கள் பங்கேற்றனா்.

ADVERTISEMENT

 

 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT