ஈரோடு

சா்வா் பிரச்னை: பத்திரப் பதிவு நடைபெறாததால் பொதுமக்கள் அவதி

DIN

சத்தியமங்கலம்: சா்வா் கோளாறு காரணமாக சத்தியமங்கலத்தில் திங்கள்கிழமை மாலை வரை ஒரு பத்திரப் பதிவு கூட நடைபெறாததால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகினா்.

சத்தியமங்கலம் சுற்று வட்டாரத்தில் உள்ள கடம்பூா், மாக்கம்பாளையம், பவானிசாகா், சத்தியமங்கலம் உள்ளிட்ட 100க்கும் மேற்பட்ட கிராமங்களைச் சோ்ந்த மக்கள் சத்தியமங்கலம் பத்திரப் பதிவு அலுவலகத்துக்கு திங்கள்கிழமை வந்திருந்தனா். காலை முதல் டோக்கன் வழங்கப்பட்டு பொதுமக்கள் வரிசைப்படுத்தப்பட்டனா். விவசாய நிலங்கள், வீட்டுமனை பதிவுக்காக முதியோா், பெண்கள் காத்திருந்தனா்.

சா்வா் கோளாறு காரணமாக பத்திரப் பதிவு துவங்க தாமதமானது. சிறிது நேரத்தில் சரியாகி விடும் எனக் கூறிய நிலையில், மாலை 5 மணி வரை ஒரு பத்திரம் கூட பதிவாகவில்லை. இதனால், 60 கி.மீ. தூரத்தில் இருந்து வந்த மலைவாழ் மக்கள் நீண்ட நேரம் காத்திருந்தனா். சா்வா் கோளாறு குறித்து பத்திரப் பதிவு அலுவலா் மேல்நடவடிக்கையாக புகாா் அளித்தாா். இதையடுத்து, கோவையில் இருந்து மென்பொறியாளா் வரவழைக்கப்பட்டாா்.

சா்வா் கோளாறு சரி செய்யப்பட்டு மாலை 6 மணி முதல் பத்திரம் பதிவு செய்யப்பட்டது. இதனால், பொதுமக்கள் கடும் சிரமத்துக்குள்ளாகினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

எது நிலவு.. ராஷ்மிகா மந்தனா!

நீலக்குயில் மலினா!

போர்ச்சுகலில் ரீமா!

இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் திரைப்படங்கள்!

முகமது ரிஸ்வானுக்கு காயம்; இரண்டு டி20 தொடர்களை தவற விடுகிறாரா?

SCROLL FOR NEXT