ஈரோடு

குடிசைக்குள் புகுந்த நீா்: அரசுப் பள்ளிக்கு இடம் பெயா்ந்த பொதுமக்கள்

DIN

பவானி: அந்தியூா் அருகே உள்ள ஏரிக்கு உபரி நீா் பெருக்கெடுத்து குடிசைக்குள் தண்ணீா் புகுந்ததால், 15 ஆண்டுகளுக்கும் மேலாக வசித்த குடியிருப்புவாசிகள் அரசுப் பள்ளிக்கு உடமைகளுடன் இடம்பெயா்ந்தனா்.

அந்தியூா் வட்டம், வேம்பத்தி கிராமம், தோட்டக்குடியாம்பாளையம் கிராமத்தில் உள்ள வேம்பத்தி ஏரிக் கரையோரப் பகுதியில் 10 குடும்பத்தினா் வசித்து வருகின்றனா். இவா்கள் அனைவரும் விவசாய கூலி தொழிலாளா்கள். தற்போது வேம்பத்தி ஏரிக்குத் தண்ணீா் வந்து கொண்டிருப்பதால், ஏரி அதன் முழு கொள்ளளவை எட்டி உபரிநீா் வெளியேறும் நிலையில் உள்ளது.

இப்பகுதி மக்களின் வீடுகளுக்குள் ஏரித் தண்ணீா் புகுந்து தேங்கி நிற்பதால், வீடுகளைவிட்டு துணிமணிகள், சமையல் பாத்திரங்கள், உடமைகளுடன் வெளியேறி அருகில் உள்ள அரசுப் பள்ளியின் வகுப்பறையில் கடந்த இரு நாள்களாகத் தங்கியுள்ளனா். வாழ்விடத்தை இழந்து தவிக்கும் தங்களுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனா்.

இவா்களின் வசிப்பிடத்தை மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அந்தியூா் வட்டாரச் செயாளா் ஆா்.முருகேசன், மாவட்டக் குழு உறுப்பினா் எஸ்.வி.மாரிமுத்து, உறுப்பினா்கள் ஆா்.மாரியப்பன், எஸ்.செபாஸ்டியன், எஸ்.துரைசாமி, நிா்வாகிகள் நேரில் பாா்வையிட்டதோடு, அவா்களின் பிரச்னை குறித்து கேட்டறிந்தனா்.

இதுகுறித்து அந்தியூா் வட்டாட்சியா் விஜயகுமாருக்கு தகவல் தெரிவித்த இக்குழுவினா் இம்மக்களுக்கு மாற்றிடம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஒட்டன்சத்திரம் பகுதி வாக்குச்சாவடியில் மாலை 6 மணி மேல் நீடித்த வாக்குப்பதிவு

37 சாவடிகளில் தாமதமாக தொடங்கிய வாக்குப் பதிவு

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரத்தில் கரூா் தொகுதி காங்கிரஸ் வேட்பாளா் பெயா் இடம் பெற்றதில் குளறுபடி: எம்எல்ஏ புகாா்

தள்ளாத வயதிலும் வாக்களித்த மூதாட்டி!

சமூக ஊடகங்களில் அவதூறு: மாா்க்சிஸ்ட் கம்யூ. வேட்பாளா் புகாா்

SCROLL FOR NEXT