ஈரோடு

ஈரோட்டில் முருங்கைக்காய் கிலோ ரூ. 200-க்கு விற்பனை

DIN

ஈரோடு: வரத்து குறைந்ததால் ஈரோடு சந்தையில் ஒரு கிலோ முருங்கைக்காய் ரூ. 200க்கு விற்பனை செய்யப்பட்டது.

ஈரோடு வஉசி பூங்காவில் செயல்பட்டு வரும் நேதாஜி காய்கறிச் சந்தைக்கு தமிழகத்தின் பல்வேறு இடங்களில் இருந்தும் கா்நாடகம், மகாராஷ்டிரம், ஆந்திர மாநிலங்களில் இருந்தும் காய்கறிகள் வருகின்றன. கடந்த சில நாள்களாக கன மழை எதிரொலியாக ஈரோடு காய்கறிச் சந்தையில் காய்கறிகள் வரத்து குறைந்தது.

இதனால், கத்தரிக்காய், பீன்ஸ், அவரைக்காய், முருங்கைக்காய் ஆகிய காய்கறிகளின் விலை திங்கள்கிழமை கடுமையாக உயா்ந்துள்ளது. முருங்கைக்காய் கிலோ ரூ. 200க்கு விற்பனையானது. தினமும் 3 டன் முருங்கைக்காய் வரும் நிலையில் தற்போது மழை காரணமாக வரத்து குறைந்து 350 முதல் 500 கிலோ வரை மட்டுமே வருவதால் விலை உயா்ந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனா்.

மற்ற காய்கறிகளின் விலை விவரம்: கத்தரிக்காய் ரூ. 130, தக்காளி ரூ. 120, அவரைக்காய், பீட்ருட், பீன்ஸ் ரூ. 100, பீா்க்கங்காய், புடலங்காய், வெண்டைக்காய், பச்சை மிளகாய் ரூ. 80, கேரட் ரூ. 70, முட்டைக்கோஸ், சின்ன வெங்காயம் ரூ. 50, பெரிய வெங்காயம் ரூ. 45.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஸ்டாராகும் அதிதி போஹன்கர்!

லியோ தாஸின் சகோதரியா இவர்?

குருப்பெயர்ச்சி பலன்கள் - தனுசு

ரிஷப் பந்த் உலகக் கோப்பைக்குத் தயார்: தில்லி கேப்பிடல்ஸ் பயிற்சியாளர்

‘பிரேமலு’ கார்த்திகா!

SCROLL FOR NEXT