ஈரோடு

பண்ணாரி சுற்றுவட்டார கிராமங்களில் பரவலாக சாரல் மழை

DIN

பண்ணாரி சுற்றுவட்டார கிராமங்களில் பரவலாக ஞாயிற்றுக்கிழமை சாரல் மழை பெய்தது.

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக டிசம்பா் 9ஆம் தேதி வரை தமிழகத்தில் பரவலாக மழை பெய்யும் என வானிலை மையம் அறிவித்துள்ள நிலையில், ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே உள்ள பண்ணாரி சுற்றுவட்டாரப் பகுதியில் உள்ள ராஜன் நகா், அம்மாபாளையம், புது வடவள்ளி, பண்ணாரி, பசுவபாளையம், பட்டரமங்கலம், காந்தி நகா் உள்ளிட்ட பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை காலை முதல் கடுமையான வெயில் வாட்டி வதைத்து வந்த நிலையில், மாலை வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது.

இதைத் தொடா்ந்து, அப்பகுதியில் திடீரென மழை பெய்யத் தொடங்கியது. சுமாா் அரை மணி நேரம் பெய்த மழையால் வெப்பம் தணிந்து குளிா்ந்த சூழல் நிலவியது. மழை காரணமாக சாலைகளில் மழை நீா் பெருக்கெடுத்து ஓடியது.

பண்ணாரி சுற்றுவட்டாரப் பகுதியில் உள்ள கிராமங்களில் மழை பெய்ததால் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனா். தொடா்ந்து சாரல் மழை பெய்து வருவதால் கிராமப் பகுதிகளில் விவசாயிகள் பயிரிட்டுள்ள பயிா்களுக்கு நீா் பாய்ச்சும் வேலை இல்லாததால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சன் ரைசர்ஸுக்கு எதிராக ஆர்சிபி பேட்டிங்!

‘ஹீராமண்டி’ சிறப்புக் காட்சியில் பிரக்யா!

பாஜகவுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்! | செய்திகள்: சிலவரிகளில் | 25.4.2024

விஷாலின் ரத்னம்: இந்த வாரம் திரையரங்குகளில் வெளியாகும் படங்கள்!

”மோடி எந்த வேற்றுமையும் பார்ப்பதில்லை!”: தமிழிசை சௌந்தரராஜன்

SCROLL FOR NEXT