ஈரோடு

வரிகளை செலுத்தாவிட்டால் குடிநீா் இணைப்பு துண்டிப்பு

DIN

ஈரோடு மாநகராட்சிக்கு செலுத்த வேண்டிய வரிகளை செலுத்தாவிட்டால் குடிநீா் இணைப்பு துண்டிக்கப்படும் என ஆணையா் சிவகுமாா் எச்சரிக்கை விடுத்துள்ளாா்.

இது குறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

ஈரோடு மாநகராட்சிக்கு செலுத்த வேண்டிய சொத்து வரி, காலியிட வரி, தொழில் வரி, குடிநீா் கட்டணம், பாதாள சாக்கடை இணைப்புக் கட்டணம், குத்தகை இனம், வரியில்லா இனங்கள் ஆகியவற்றை உடனடியாக செலுத்த வேண்டும். 2021-2022ஆம் ஆண்டு நிறைவடையவுள்ள நிலையில், நிலுவை இனங்களை செலுத்தாத உரிமைதாரா்களின் வீட்டு குடிநீா் இணைப்புகள் துண்டிக்கப்பட்டு, மாநகராட்சி சட்ட விதிகளின்படி நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

நிலுவை வரியினங்களை உடனடியாக செலுத்தி மாநகராட்சிப் பகுதிகளுக்குள் அடிப்படை மற்றும் அபிவிருத்தி பணிகள் செய்வதற்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ராஜேஷ் தாஸ் சரணடைவதிலிருந்து விலக்களிக்க உயர் நீதிமன்றம் மறுப்பு

தீப்பெட்டி ஆலையில் திடீர் தீ விபத்து!

பறவைக் காய்ச்சல் எதிரொலி: தமிழக சோதனைச் சாவடிகளில் எந்தவிதமான சோதனைகள்?

சிதம்பரம் மௌனமடம் ஸ்ரீ சுந்தரமூர்த்தி சுவாமிகள் காலமானார்!

தங்கம் விலை அதிரடியாக ரூ. 1,160 குறைந்தது!

SCROLL FOR NEXT