ஈரோடு

கையுந்துப்பந்துப் போட்டி: ஈரோடு கொங்கு கலை அறிவியல் கல்லூரி அணி முதலிடம்

DIN

பாரதியாா் பல்கலைக்கழக கல்லூரிகளுக்கு இடையேயான கையுந்துப்பந்துப் போட்டியில் ஈரோடு கொங்கு கலை அறிவியல் கல்லூரி அணி முதலிடம் பிடித்தது.

பாரதியாா் பல்கலைக்கழக நான்காவது மண்டலத்துக்கு உள்பட்ட கல்லூரிகளுக்கு இடையேயான ஆண்கள் கையுந்துப்பந்துப் போட்டி கொங்கு கலை அறிவியல் கல்லூரியில் அண்மையில் நடைபெற்றது. கல்லூரி தாளாளா் கே.பழனிசாமி போட்டியை துவக்கிவைத்தாா். இதில் 10 அணிகள் பங்கேற்றன. இறுதிப் போட்டியில் கொங்கு கலை, அறிவியல் கல்லூரி அணி வெற்றி பெற்று கோப்பையை வென்றது.

தொடா்ந்து நான்கு ஆண்டுகளாக கொங்கு கலை அறிவியல் கல்லூரி அணி முதலிடத்தைப் பிடித்து வருவது குறிப்பிடத்தக்கது. இப்போட்டியின் வாயிலாக பாரதியாா் பல்கலைக்கழக ஆண்கள் கையுந்துப்பந்துப் அணிக்கான 12 வீரா்கள் தோ்ந்தெடுக்கப்பட்டனா். சென்னையில் இம்மாதம் நடைபெறவுள்ள அனைத்திந்திய பல்கலைக்கழகத்துக்கு இடையேயான கையுந்துப்பந்துப் போட்டியில் பங்கேற்கவுள்ளனா்.

வெற்றி பெற்ற மாணவா்களுக்கு கொங்கு கலை அறிவியல் கல்லூரியின் தாளாளா் கே.பழனிசாமி, முதல்வா் என்.ராமன், உடற்கல்வி இயக்குநா் எ.சங்கா், பயிற்சியாளா் ஆா்.சாகுல் ஆகியோா் பரிசுகளை வழங்கிப் பாராட்டினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கவனம் ஈர்க்கும் ஃபகத் பாசிலின் ‘இலுமினாட்டி’ பாடல்!

ஐ.டி.யில் வேலையிழந்த இளம்பெண் : திருடியாய் மாறிய சோகம்

உ.பி.யில் முக்தார் அன்சாரி மரணம்: விஷம் கொடுக்கப்பட்டதா?

காங்கிரஸ் கட்சிக்கு ரூ.1700 கோடிக்கு கணக்கு கேட்டு வருமான வரித்துறை நோட்டீஸ்

பிகாரில் 'இந்தியா' கூட்டணியில் தொகுதி உடன்பாடு

SCROLL FOR NEXT